மாமனாரால் தர்ம சங்கடத்தில் சமந்தா?
Recommended Video
ஹைதராபாத்: மாமனார் நாகர்ஜுனாவால் சமந்தா தர்மசங்கடமான நிலையில் உள்ளார்.
பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள மன்மதுடு 2 படத்தில் நாகர்ஜுனா ஒரு பிளேபாய் போன்று நடித்துள்ளார். மகள் வயது பெண்ணுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து அவர் நடித்திருக்கிறார்.

மருமகள் வந்த பிறகு இது போன்ற படம் எல்லாம் தேவை தானா என்று பலரும் விமர்சிக்கிறார்கள். மன்மதுடு டீஸர்களை பார்த்தவர்கள் ஏம்மா சின்மயி ஊருக்கு எல்லாம் உபதேசம் பண்ணும் நீங்க உங்க புருஷனுக்கு பண்ண மாட்டீங்களா?, என்ன படம் எடுத்துள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் மன்மதுடு 2 படத்தின் ஹீரோயினான ரகுல் ப்ரீத் சிங் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்தது சர்ச்சையாகியுள்ளது. நான் புகைப்பிடிப்பது போன்று நடிப்பதால் ரசிகர்களை அப்படி செய்ய வேண்டும் என்று நான் தூண்டவில்லை. அது நடிப்பு அவ்வளவு தான் என்று ரகுல் ப்ரீத் கூலாக விளக்கம் அளித்துள்ளார்.
அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பும் மன்மதுடு 2 படத்தில் சமந்தா கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். நாகர்ஜுனா லிப் டூ லிப் முத்தக் காட்சியில் நடித்ததால் அவரை பலரும் விளாசுகிறார்கள். இந்நிலையில் சமந்தா நாகர்ஜுனாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
மேலும் ரகுல் ப்ரீத் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்ததற்கு சமந்தா ஏன் எதிர்ப்போ ஆதரவோ தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்ப மோசம் என்று விமர்சித்த நாகர்ஜுனா அதை தொகுத்து வழங்கப் போவது குறித்தும் சமந்தா ஏன் அமைதியாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமந்தா அவர் நடிக்கும் படங்களில் பிசியாக உள்ளார். மேலும் மாமனார் படம் சர்ச்சையில் சிக்கினால் அது குறித்து மருமகள் ஏதாவது சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. ரகுல் ப்ரீத் புகைப்பிடித்தால் அதற்கு சமந்தா என்ன செய்வார். இயக்குநர் ராகுல் ரவீந்திரன் சொன்னதால் ரகுல் புகைப்பிடித்தார். அதற்கு சமந்தாவை விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் பாஸ்.


Click it and Unblock the Notifications











