என்னை அறிந்தால் ட்ரெய்லர் கெத்து, மாஸ், அருமை: பிரபலங்கள் ட்வீட்
சென்னை: அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் ட்ரெய்லரை பார்த்த பிரபலங்கள் அதை ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் ட்ரெய்லர், இசை ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் திரை உலக பிரபலங்களுக்கும் மிகவும் பிடித்துள்ளது.
இது குறித்து பிரபலங்கள் ட்விட்டரில் என்ன கூறியுள்ளனர் என்று பார்ப்போம்,

வெங்கட் பிரபு
என்னை அறிந்தால் ட்ரெய்லர் செம மாஸ். இதயத்தை பாடலுக்கு அடிமையாகிவிட்டேன் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

சமந்தா
நான் லேட் தான். ஆனால் என்னை அறிந்தால் ட்ரெய்லரை தற்போது தான் பார்த்தேன். லவ்!!!!! அருமை !! என்று சமந்தா ட்வீட் செய்துள்ளார்.

தமன்னா
என்னை அறிந்தால் ட்ரெய்லர் மிகவும் பிடித்துள்ளது. படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள் என்று தமன்னா தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி
என்னை அறிந்தால் ட்ரெய்லர் நிஜமாலே செம கெத்து என்று ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

வருண் மணியன்
பல காலம் கழித்து ஹாரிஸ் இசையில் பெப்பி பாடலை கேட்டு ரசிக்கிறேன். 'மழை வர பாக்குதே' திரும்பத் திரும்ப கேட்கிறேன் என்று தயாரிப்பாளர் வருண் மணியன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











