என்னை அறிந்தால் டீஸர் கிளாஸ், மாஸ், வாவ், சூப்பர்: புகழும் பிரபலங்கள்
சென்னை: என்னை அறிந்தால் படத்தின் டீஸர் அருமையாக உள்ளதாக கோலிவுட் பிரபலங்கள் பலர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் டீஸரை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் டீஸர் பற்றி பிரபலங்கள் ட்விட்டரில் கூறியுள்ளதை பார்ப்போம்.

சிம்பு
என்னை அறிந்தால் அதிகாரப்பூர்வ டீஸர், அஜீத், கௌதம்...: கிளாஸ் + மாஸ் பாருங்கள்.... என்று சிம்பு ட்வீட் செய்துள்ளார்.

வெங்கட் பிரபு
ஜிவிஎம் டீஸர்!!! கிளாஸி என்னை அறிந்தால் #தல என்று வெங்கட் பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

குஷ்பு
என்னை அறிந்தால் டீஸர் பார்த்தேன். என் ஜார்ஜ் க்ளூனி மறுபடியும் வந்துவிட்டார்...தல மாஸ்...சூப்பர்-டூப்பர் மாஸ்..எனக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மீண்டும் வந்துள்ளார் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

அனிருத்
என்னை அறிந்தால் டீஸர்- மாஸ் மற்றும் ராக்கிங் என்று அனிருத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தனுஷ்
என்னை அறிந்தால் டீஸர் மாஸ் :) படம் வெளியாக காத்திருக்கிறேன் என்று தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த்
@menongautham மிகவும் அருமை:):):) காத்திருக்கிறேன் !!! என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

விக்ரம் பிரபு
இந்த கூட்டணிக்காக வெகுகாலம் காத்திருந்தேன். இது கலக்க வேண்டிய நேரம்!! என்னை அறிந்தால் டீஸர் என்று விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











