லிங்கா மாஸ், ஓ.கே., அதே மசாலா, ராக்கிங், முடியல: ஃபேஸ்புக், ட்விட்டரில் ரசிகர்கள் கருத்து
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ரஜினியின் சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக அவரது பிறந்தநாள் அன்று அவரின் படம் ரிலீஸாகியுள்ளது.
இந்நிலையில் லிங்கா பற்றி ரசிகர்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்,

சூப்பர் ஹிட்
தற்போது தான் லிங்கா படத்தை பார்த்தேன். சூப்பர்ஸ்டார் படுஸ்டைலாக உள்ளார். சூப்பர் ஹிட் படம் என்று கமருத்தீன் என்பவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

அருமை
லிங்கா படத்தை துபாயில் பார்த்தேன். நல்லா இருக்கு அருமை என ஷாகுல் ஹமீது என்பவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

ரூ.100 கோடி
லிங்கா 3 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்யும் என கூறப்படுகிறது என்று கார்த்திக் ரிஷி என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

கட் பண்ணுங்க
படத்தில் சில காட்சிகளை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் தயவு செய்து கிளைமாக்ஸை முழுதாக கத்தரித்துவிடுங்கள் என முகமது என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

நல்லா இல்லை
பிளாஷ்பேக் காட்சிகள் அருமை. செம மாஸ். அதை தவிர சோனாக்ஷி உள்பட எதுவும் நன்றாக இல்லை. இடைவேளை வரை நன்றாக உள்ளது என மாதவன் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒன் மேன் ஷோ
லிங்காவில் உள்ள ஒரே நல்ல விஷயம் ரஜினி சார் தான். மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நன்றாக உள்ளது. ஒன் மேன் ஷோ என ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவர் ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











