»   »  உத்தம வில்லன் ட்ரெய்லர் கிளாஸ், மாஸ்: கொண்டாடும் ரசிகர்கள்

உத்தம வில்லன் ட்ரெய்லர் கிளாஸ், மாஸ்: கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தம வில்லன் ட்ரெய்லர் அருமை என்று பலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் ஹாஸன், ஆண்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ள உத்தம வில்லன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் அண்மையில் மறைந்த இயக்குனர் கே. பாலசந்தரும் உள்ளார். இது தான் அவர் நடித்த கடைசி படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ட்ரெய்லர் பற்றி ரசிகர்கள் ட்விட்டரில் என்ன தெரிவித்துள்ளனர் என்று பார்ப்போம்,

கிளாஸ்

கிளாஸ்

கிளாஸ் மாஸ்டர் கமல் ஹஸன் உத்தம வில்லனாக வருகிறார். ட்ரெய்லர் அருமை. அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ள காத்திருக்கிறேன் என கார்த்திக் ரிஷி தெரிவித்துள்ளார்.

தலைவர்

தலைவர்

தலைவர் வந்துவிட்டார். கிளாஸிமேக்ஸ் ட்ரெய்லர். பொடியன்கள் ஓரமாக நின்று ஜாம்பவானுக்காக காத்திருங்கள் என்று சீனி என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

ஹிட்

ஹிட்

உத்தம வில்லன் ஒன்று வரலாற்று ஹிட்டாகும், அல்லது பிளாப்பாகும். அனைத்தும் கதை நகரும் விதத்தை பொருத்து தான் உள்ளது என கொக்கி குமார் தெரிவித்துள்ளார்.

கமல்

கமல்

பல அவதாரம் எடுப்பது கமல் ஹாஸனால் மட்டுமே முடியும். அவ்வளவு அர்ப்பணிப்பு. டாப் கிளாஸ் என டிஎஸ்கேஎன் தெரிவித்துள்ளார்.

தெரி

தெரி

உத்தம வில்லன் ட்ரெய்லர் கிளாஸ்... பிஜிஎம் தெரி... உலகநாயகன்... வேறு என்ன தேவை என நிலா ட்வீட் செய்துள்ளார்.

வணங்க வேண்டும்

வணங்க வேண்டும்

கமலின் பணிக்காக அவரை அனைவரும் வணங்க வேண்டும். உத்தம வில்லன் அனைத்து படைப்பாளிகளுக்கும் சிறந்த அனுபவமாக இருக்கும் என சூர்ய நாராயணன் தெரிவித்துள்ளார்.

நடிப்பு

நடிப்பு

நடிப்பு என்பதற்கான அர்த்தத்தை தேடினால் கமல் ஹாஸன் என்ற விடை கிடைக்கும். உத்தம வில்லன் கிளாஸி ட்ரெய்லர் என அருண் தெரிவித்துள்ளார்.

மாஸ்

மாஸ்

உத்தமவில்லன் ட்ரெய்லர் மாஸ் என்று விஜய் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

English summary
Kamal Haasan's Uthama Villain trailer has been a hit among fans.
Please Wait while comments are loading...