'அனேகன்' தாறுமாறு தக்காளி சோறு... நாங்க சொல்லலை சார், ரசிகர்கள் சொல்றாங்க!
சென்னை: தனுஷ், புதுமுகம் அமிரா தஸ்துர் நடித்துள்ள அனேகன் படம் அருமையாக உள்ளதாக ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், கார்த்திக், அமிரா தஸ்துர் உள்ளிட்டோர் நடித்துள்ள அனேகன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தை பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
படம் பற்றி சில ட்வீட்கள் இதோ,
பூரணி காதலன்
படம் பட்டாசு போல வெடிக்குது மீண்டும் இந்த கூட்டணி அமைய வாழ்த்துக்கள் #அனேகன் @dhanushkraja @anavenkat என்று பூரணி என்பவர் ட்வீட் செய்துள்ளார்.
சபா
தனுஷ் அண்ணா பின்னிட்டீங்க!! மாஸ் நடிப்பு!! நடிப்பே வேர லெவல், டங்கா மாரிக்கு அமோக வரவேற்பு. #vip #shamitabh #anegan அடுத்தடுத்து ஹிட்
பிரதீப்
அனேகன் பக்கா என்டர்டெய்ன்மென்ட். இரண்டாவது பாதியில் தனுஷ் ஒரே படத்தில் நான்கு படங்களை காட்டியுள்ளார். 30 ஆண்டுகளுக்கு அவர் கோலிவுட்டை ஆட்சி செய்வார்.
விக்னேஸ்வர்
அனேகன் படத்தை இப்போது தான் பார்த்தேன். சூப்பர்ப் படம். ரசித்து பார்த்தேன். மரண மாஸ்
அதாரு நவீன்
அனேகன் தாருமாறு தக்காளி சோறு...... @dhanushkraja
அவசரஅடி ரங்கா
அனேகன் படத்தை பார்க்க மாஸ் பங்க், கல்லூரி மாணவர்கள்!!
சத்யதேவ்
அனேகன் படம் செமயா இருக்கு. கார்த்திக் நடிப்பு மிகவும் அருமை. சூப்பர்ப் படம்.


Click it and Unblock the Notifications











