Leo: ALTER EGO என்ன அர்த்தம் தெரியுமா? பிரபலம் சொன்ன சுவாரசியத் தகவல்!

சென்னை: லியோ படத்தின் போஸ்டரில் இடம்பெற்ற ALTER EGO என்ற வார்த்தைக்கான அர்த்தம் குறித்து சுவாரசியத் தகவல் வெளியாகி உள்ளது.

அதிரடியான வெற்றிப்படத்தை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். அதில், த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஸ்கின் என பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்டபடப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

லியோ: லியோ படத்தின் அப்டேட்டுக்காக காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்,

நா ரெடி முதல் சிங்கிள்: விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, அனிருத் இசையமைப்பில் நா ரெடி பாடல் வெளியாகும் என்று போஸ்டருடன் வெளியிட்டு இருந்தார். அந்த போஸ்டரில் விஜய் புகைபிடிப்பதை போல இருப்பது சர்ச்சையானது, மேலும், அந்த போஸ்டரில் ALTER EGO என்ற ஒரு வார்த்தை இடம்பெற்றுள்ளது. இதனால், அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று ரசிகர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

What does alter ego mean Interesting information from Bismi

ALTER EGO : இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சினிமா விமர்சகரான வலைப்பேச்சு பிஸ்மி ALTER EGO என்றால் என்ன என்பதை விளக்கி உள்ளார். அதில், "ALTER EGO" என்னவென்றால், ஒரே ஆள் வேறு வேறு நேரத்தில் வேறு வேறு பணிகளை செய்பவர் என அர்த்தம்.

பாட்ஷா படத்தின் நவீன வர்ஷன்: லியோ படத்தின் கதை என்னவென்றால் ஒரே விஜய் ஒரு இடத்தில ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, அங்கு சில சேட்டைகளை செய்துவிட்டு, வேறு இடத்தில் ஒன்னுமே தெரியாத அப்பாவி போல இருக்கிறார். இவர் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட எதிரிகள் தேடி வருவதுதான் லியோ படத்தின் ஒன் லைன். சுருக்கமாக சொல்லப்போனால் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் நவீன வர்ஷன் தான் லியோ. இதனால், இதை புரிய வைக்கும் வார்த்தை தான் ALTER EGO என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X