அங்கு விஜய்க்கு மறுமணம்: இங்கு 15 கணவர்கள் பற்றி பேசும் அமலா பால்

By Siva

Recommended Video

Aadai Press Meet - நிர்வாணமா எப்படி நடிச்சேன் தெரியுமா?

சென்னை: ஏ.எல். விஜய் மறுமணம் செய்து கொண்டது குறித்து அவரின் முன்னாள் மனைவியான அமலா பால் என்ன கருத்து தெரிவித்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர்.

அமலா பாலும், இயக்குநர் ஏ.எல். விஜய்யும் காதலித்து திருமணம் செய்தார்கள். ஆனால் திருமணமான வேகத்தில் இருவரும் பிரிந்து முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து விஜய் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணான டாக்டர் ஐஸ்வர்யாவை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

அமலா பால்

அமலா பால்

விஜய்யின் திருமண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பார்த்தவர்கள் இது குறித்து அமலா பால் என்ன கருத்து தெரிவித்துள்ளார் என்பதை பார்க்க அவரின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அடிக்கடி சென்று பார்க்கிறார்கள்.

மறுமணம்

அமலா பால் விஜய்யின் மறுமணம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அவர் தான் நடித்துள்ள ஆடை படம் குறித்து தான் தொடர்ந்து ட்வீட் செய்து கொண்டிருக்கிறார். மேலும் ஆடை படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அமலா பால். விஜய்க்கு மறுமணம் நடந்துள்ள நேரத்தில் 15 கணவர்கள் குறித்த செய்தியை ரீட்வீட் செய்துள்ளார் அமலா பால். விஜய்யின் திருமண புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் அவர் நல்ல முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். சிலர் அமலா பாலை குத்திக்காட்டி பேசியுள்ளனர்.

விவாகரத்து

விவாகரத்து

விஜய்யும், அமலா பாலும் பிரிந்தபோது ஒருவரையொருவர் குறை கூறி பேட்டி அளிக்கவில்லை. இது எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்று கூறிவிட்டனர். திருமண உறவில் நம்பிக்கை, நேர்மை முக்கியம். அது மீறப்படும்போது அந்த உறவுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது என்று விஜய் முன்பு தெரிவித்தார். அதை பார்த்தவர்களோ அமலா பால் விஜய்க்கு துரோகம் செய்துவிட்டதாக பேசினார்கள்.

விட்டுக்கொடுத்தல்

விட்டுக்கொடுத்தல்

விஜய்யை பிரிந்த பிறகு அமலா பால் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, நான் இன்னும் விஜய்யை காதலிக்கிறேன், எப்பொழுதுமே காதலிப்பேன். அவர் எப்பொழுதுமே எனக்கு ஸ்பெஷலானவர். ஆனால் சில சமயம் பிரிதலும் கூட காதலே. என் வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளில் இது தான் மிகவும் கஷ்டமானது. யாருமே விவாகரத்து பெற திருமணம் செய்வது இல்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X