'டார்லிங்' பிரபாஸுக்கு அனுஷ்கா என்ன பிறந்தநாள் பரிசு கொடுத்தார் தெரியுமா?
ஹைதராபாத்: காதலர் என்று கிசுகிசுக்கப்படும் பிரபாஸுக்கு பிறந்தநாள் அன்று அனுஷ்கா ஸ்பெஷல் பரிசு அளித்துள்ளார்.
பாகுபலி, பாகுபலி 2 படங்களில் நடித்துபோது அனுஷ்கா, பிரபாஸ் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட இருவரும் ஒப்புக் கொள்ளவில்லை.
இருப்பினும் அந்த பேச்சு மட்டும் இன்னும் அடங்கவில்லை.

பிறந்தநாள்
பிரபாஸ் நேற்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். அனுஷ்கா பிரபாஸுக்காக தேடித் தேடி ஒரு ஸ்பெஷல் பரிசை வாங்கிக் கொடுத்துள்ளார்.

பரிசு
பிரபாஸுக்கு கைக்கடிகாரம் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அனுஷ்கா பிரபாஸுக்கு ஒரு டிசைனர் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்து அசத்தியுள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக்
பிரபாஸ் தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிரபாஸின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது. இது பிரபாஸ் தனது ரசிகர்களுக்கு அளித்த பரிசு.

அனுஷ்கா
அனுஷ்கா கடந்த 9 ஆண்டுகளாக எங்களின் குடும்ப நண்பராக உள்ளார். அவருக்கும் எனக்கும் இடையே காதல் இல்லை. ஆனால் மற்றவர்கள் பேசுவதை பார்க்கும்போது ஒரு வேளை காதல் இருக்குமோ என்று நான் கூட நினைத்தது உண்டு என்று பிரபாஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











