ஓவியா பற்றி ஆரவ் ஏன் அப்படி ட்வீட் செய்தார்?

By Siva

Recommended Video

ராஜபீமா படத்தில் ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போடும் ஓவியா-ஆரவ்- வீடியோ

சென்னை: ஆரவ் இப்படி எல்லாம் ட்வீட்டினால் ரசிகர்களுக்கு வேறு மாதிரி எதிர்பார்ப்பு ஏற்படாதா என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரவும், ஓவியாவும் நண்பர்களாக உள்ளனர். ஒன்றாக பார்ட்டிகளுக்கு செல்கிறார்கள், ஊர் சுற்றிப் பார்க்க வெளிநாட்டுக்கு செல்கிறார்கள்.

அவர்கள் ஜோடியாக வெளியிடும் புகைப்படங்களை பார்த்தால் ரசிகர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது.

ஓவியா

ஓவியா

ஆரவ் ஹீரோவாக நடித்து வரும் ராஜபீமா படத்தில் ஓவியா ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். ஆனால் ஓவியா கவுரவத் தோற்றத்தில் வரவில்லை அதற்கும் மேல் என்று கூறி ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டுள்ளார் ஆரவ். அவர்கள் இருவரும் சேர்ந்து நடனமாடிய புகைப்படம் வெளியாகி வைரலானது.

ஆரவ்

ராஜபீமா குறித்த ஆரவின் ட்வீட்டை பார்த்த ஓவியா மகிழ்ச்சி தெரிவித்து பதில் அளித்தார். இதை பார்த்த ஆரவோ, நன்றி டியர் இது வெறும் துவக்கமே என்று தெரிவித்துள்ளார். ஆரவின் ட்வீட் ரொமான்டிக்காக உள்ளதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ஆரவின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரும், ஓவியாவும் காதலிப்பதாக முடிவுகட்டிவிட்டனர். படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் அவர்கள் சேர வேண்டும் என்பதே ஆரவியா ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இருப்பினும் அதுவாக நடக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.

நண்பர்கள்

நண்பர்கள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ஆரவின் பெயரை யாராவது சொன்னாலே வெட்கப்படுகிறார் ஓவியா. என்ன ஆரவ், நீங்களும் ஓவியாவும் காதலிக்கிறீர்களா என்று கேட்டால் அவரோ இல்லை நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்கிறார். என்னமோ போங்கப்பா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X