தீபிகாவுக்கு வருங்கால கணவரிடம் எந்த விஷயம் பிடித்திருக்கு என்று பாருங்க!
Recommended Video

மும்பை: வருங்கால கணவரான ரன்வீர் சிங்கிடம் என்ன பிடிக்கும் என்று நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ராம் லீலா படத்தில் நடித்தபோது ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலில் விழுந்தனர். 2013ம் ஆண்டில் இருந்து காதலித்து வரும் அவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.
அவர்களின் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

திருமணம்
ரன்வீர் சிங், தீபிகாவின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடக்கும் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்காக நகை, உடைகள் வாங்க தீபிகா லண்டனுக்கு சென்று வந்துள்ளார்.

காதல்
தீபிகாவை காதலிப்பதாக ரன்வீர் சிங் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால் தீபிகா காதல் பற்றி பேசியதே இல்லை. தான் ரன்வீரை காதலிப்பதை தற்போது தான் முதல் முறையாக தீபிகா ஒப்புக் கொண்டுள்ளார்.

ரன்வீர்
ரன்வீர் சிங்கிடம் தனக்கு என்ன பிடிக்கும் என்று தீபிகா தெரிவித்துள்ளார். இது குறித்து தீபிகா கூறியதாவது,ரன்வீர் ரொம்ப நல்ல மனிதர். அனைவரிடமும் அன்பாக இருப்பார். அழுவதற்கு பயப்படாத ஆள். அது தான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது. அவர் தான் என் பெஸ்ட் பிரெண்ட்.
அவர் ஒருபோதும் என் மனதை காயப்படுத்த மாட்டார் என்பது எனக்கு தெரியும் என்றார்.

தீபிகா
தீபிகா தற்போது புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் அதிகமாக சம்பளம் கேட்பதாலும், ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரம் கேட்பதாலும் அவரை ஒப்பந்தம் செய்ய பல தயாரிப்பாளர்கள் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











