»   »  ரஜினியின் 2.0 ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து ஒரேயொரு வார்த்தை சொன்ன தனுஷ்

ரஜினியின் 2.0 ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து ஒரேயொரு வார்த்தை சொன்ன தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் 2.0 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து அவரின் மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் 2.0 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா மும்பையில் பிரமாண்டமாக நடந்தது.


விழாவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


ஐஸ்வர்யா

இந்த புகைப்படம் மிகவும் பிடித்துள்ளது... எனக்கு பிடித்த இரண்டு ஆண்கள் 💕💕 @superstarrajini @BeingSalmanKhan என 2.0 ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.
சவுந்தர்யா

வேற லெவல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ #2point0 என சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்வீட்டியுள்ளார்.


தனுஷ்

2.0 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டு டாட்(Dot) என தெரிவித்துள்ளார் தனுஷ்.


அனிருத்

தீபாவளி 2017 தயவு செய்து சீக்கிரம் வா 🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥மாஸ் மகாராஜா 🙏🙏🙏🙏🙏🙏 என இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


English summary
Dhanush has tweeted the first look of Rajinikanth's 2.0 with the caption 'Dot'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil