twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெர்சல் விவகாரம்: கவுதமி ட்வீட்டால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்

    By Siva
    |

    Recommended Video

    மெர்சல் விவகாரம்: ட்விட்டரில் பாஜகவை டார் டாராக கிழித்து தொங்கவிட்ட குஷ்பு, கவுதமி

    சென்னை: மெர்சல் சர்ச்சை பெரிதாகியுள்ள நிலையில் நடிகை கவுதமி படத்தை பார்த்துள்ளார்.

    மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பற்றி விஜய் பேசிய வசனங்களுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதை நீக்குமாறு கெடுவும் விதித்தது.

    சென்சார் சான்றிதழ் பெறப்பட்ட பிறகு ஒரு கட்சியினர் படக்குழுவை மிரட்டி வசனங்களை நீக்கச் சொல்வது சரியல்ல என்று மக்கள் கொந்தளித்துள்ளனர்.

    மெர்சல்

    மெர்சல் படம் பார்த்தேன். சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியது சரியே. அனைத்து இந்தியர்களுக்கும் இலவச மற்றும் தரமான மருத்துவம் வழங்குமாறு படம் வலியுறுத்துகிறது என்று நடிகை கவுதமி ட்வீட்டியுள்ளார்.

    ஏமாற்றம்

    ஏமாற்றம்

    மெர்சலுக்கு ஆதரவாக ஏதாவது சொல்வார் என்று பார்த்தால் யு/ஏ சான்றிதழ் வழங்கியது சரியே என்கிறாரே என்று விஜய் ரசிகர்கள் கவுதமியின் ட்வீட்டை பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தலைவர்கள்

    பாஜக தலைவர்கள் செய்த பிரச்சனையால் தற்போது தேசிய அளவில் அரசியல் கட்சி தலைவர்கள் மெர்சல் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் பாஜகவை விளாசித் தள்ளுகிறார்கள்.

    விஜய்

    விஜய்

    விஜய் படத்திற்கு பாஜக பிரச்சனை ஏற்படுத்தியதால் உலக அளவில் இலவசமாக விளம்பரம் கிடைத்துள்ளது என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Actress Gautami tweeted that, 'Just saw #mersal #cbfc hs givn fair certificate-U/A. Film stresses urgent need fr free & standard health care fr all Concerns every Indian'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X