பொள்ளாச்சி பயங்கரம்: இளையராஜா என்ன சொல்கிறார் தெரியுமா?
Recommended Video

பொள்ளாச்சி விவகாரம்: மனம் குமுறும் சினிமா பிரபலங்கள்.. ரஜினி மட்டும் பேசவில்லையே ஏன்?- வீடியோ
சென்னை: பொள்ளாச்சி விவகாரம் குறித்து இசைஞானி இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளது. இந்த வழக்கில் மீதமுள்ள 15 பேர் எப்பொழுது கைது செய்யப்படுவார்கள் என்பதே மக்கள் கேட்கும் கேள்வி.

பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மக்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் தெரிவித்துள்ளனர். திரையுலகை சேர்ந்த சில பிரபலங்கள் நமக்கு எதற்கு வம்பு என்று சத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்.
இந்நிலையில் பொள்ளாச்சி பயங்கரம் குறித்து இசைஞானி இளையராஜா கூறியிருப்பதாவது,
இந்த விவகாரத்தில் மக்களின் கருத்தே என் கருத்தும். இனி இது போன்ற பயங்கரம் நடக்காமல் இருக்க வேண்டும். பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடக்க வேண்டும் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications