நயன்தாராவும், அமலா பாலும் விஜய், அஜீத்துடன் மட்டும் தான் நடிப்பேன் என்பதா? கருணாஸ்
சென்னை: நயன்தாரா, அமலா பால் ஆகியோர் விஜய், அஜீத் கூட மட்டும் தான் ஜோடி போடுவோம் என்றால் பிற ஹீரோக்கள் என்ன செய்வது என்று நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் கருணாஸ் நாயகனாக நடித்துள்ள மச்சான் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா பாடல்களை வெளியிட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார். அப்போது நாயகன் கருணாஸ் உரையாற்றினார்.

யார் இந்த அமலா பால்
சவுண்ட் என்ஜினியர் கிருஷ்ணன் தான் அமலா பாலை தான் தயாரித்த விகடகவி படத்தின் மூலம் நடிகையாக்கினார். இதையடுத்து சிந்து சமவெளி படத்தில் அமலா பால் மாமனாருடன் உறவு வைத்துள்ள மருமகளாக நடித்தார். அதன் பிறகு அவர் நடித்த மைனாவால் அவருக்கு பெயரும், புகழும் கிடைத்தது. இன்று விஜயுடன் ஜோடி சேரும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.

சரத் படத்தில் அறிமுகமான நயன்தாரா
நயன்தாரா சரத்குமாரின் படத்தில் தான் அறிமுகம் ஆனார். தற்போது சிம்பு, தனுஷுடன் ஜோடி போட்டு நடிக்கிறார்.

முதல்ல கதையைக் கேளுங்க
கதாநாயகிகள் யாருடன் நடிக்கிறோம் என்பதை பார்க்கக் கூடாது. முதலில் கதையைக் கேட்டுவிட்டு அவர்களின் கதாபாத்திரத்திற்குளள முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

விஜய், அஜீத் கூட மட்டும் தான் நடிப்போம்னா...
கதாநாயகிகள் விஜய், அஜீத் கூட மட்டும் தான் ஜோடியாக நடிப்போம் என்றால் பிற ஹீரோக்கள் எல்லாம் ஜோடிக்கு எங்கே போவது என்று கருணாஸ் கேட்டுள்ளார்.

இவருக்கு பெரிய ஹீரோயின்கள் வேண்டுமாம்
கருணாஸ் ஹீரோவாக நடித்த திண்டுக்கல் சாரதியில் சின்ன ஹீரோயினான கார்த்திகாவும், அம்பாசமுத்திரம் அம்பானியில் யாருக்கும் தெரியாத நவ்னீத் கௌரும் ஜோடியாக நடித்தனர். தற்போது மச்சானில் ஷெரில் பின்டோ என்ற வளர்ந்து வரும் நடிகை நடித்துள்ளார். இந்நிலையில் கருணாஸுக்கு நயன், அமலா பால் போன்ற பெரிய ஹீரோயின்கள் கூட நடிக்க வேண்டுமாம்.


Click it and Unblock the Notifications











