லாஸ்லியா அழகு, சாண்டி நல்லவர், அந்த சண்டை...: மகத்

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 3 : Day 58 : கஸ்தூரியை வெச்சி செஞ்ச வனிதா- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பற்றி மகத் கருத்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 3 வீட்டில் தினமும் சண்டை, சச்சரவாக உள்ளது. அதுவும் வனிதா மீண்டும் வந்த பிறகு பிரச்சனைகளுக்கு குறைவே இல்லை எனலாம். அந்த ஸ்கூல் டாஸ்கில் வனிதாவை பள்ளிச்சீருடையில் பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் குஷியாகி அவரை கலாய்த்து மீம்ஸ் போட்டுத் தள்ளிவிட்டனர்.

இந்நிலையில் கடந்த சீசனில் கலந்து கொண்டு காதல் கதையில் ஒரு பாகமாக இருந்த மகத் ராகவேந்திரா இந்த சீசன் குறித்து பேசியுள்ளார். பிக் பாஸ் 3 குறித்து மகத் கூறியதாவது,

மகத்

மகத்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கிய புதிதில் பார்த்தேன். ஆனால் நான் பிசியாகிவிட்டதால் அதன் பிறகு பார்க்க முடியவில்லை. நான் கேள்விப்பட்ட வரை லாஸ்லியா நல்லவர் என்று பலரும் கூறியுள்ளனர். அவர் பார்க்க அழகாக உள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள். என் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சாண்டி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். சாண்டி நல்ல பெயர் எடுக்க வேண்டும்.

எரிச்சல்

எரிச்சல்

இந்த சீசனில் நிறைய சண்டை நடப்பதாக கேள்விப்பட்டேன். வெளியுலக தொடர்பே இல்லாமல் ஒரு வீட்டில் இருக்கும்போது கடுப்பாகத் தான் இருக்கும். முந்தைய சீசனில் நாங்கள் அனைவரும் இதை அனுபவித்துள்ளோம். அதனால் யாரையும் அவசரப்பட்டு இவர் இப்படி தான் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்றார் மகத்.

கவின்

கவின்

கவின் செய்யும் சேட்டைகளை பார்க்கும் பார்வையாளர்கள் மகத் எல்லாம் தங்கம் என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. மகத்தாவது யாஷிகாவை மட்டும் தான் காதலித்தார். இந்த கவின் சாக்ஷி, லாஸ்லியா என்று ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்தார் என்று பார்வையாளர்கள் விளாசியுள்ளனர். ஆரம்பத்தில் நல்ல பெயர் எடுத்த லாஸ்லியா கவினுடன் சேர்ந்த பிறகு கெட்ட பெயர் வாங்கிவிட்டார்.

வனிதா

வனிதா

3வது சீசன் போட்டியாளர்களின் நடவடிக்கைகளால் காயத்ரி ரகுராம், ஜூலி ஆகியோரை திட்டுவதை பார்வையாளர்கள் நிறுத்திவிட்டனர். வனிதாவுடன் ஒப்பிடும் போது காயத்ரி ரகுராம் நல்லவர் என்கிறார்கள் பார்வையாளர்கள். வனிதா ஒயில்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ளது பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X