»   »  முடிஞ்சு போச்சு.. அவ்ளோதான்.. கத்ரீனாவின் அம்மாவுக்கு ரன்பீரின் தாய்!

முடிஞ்சு போச்சு.. அவ்ளோதான்.. கத்ரீனாவின் அம்மாவுக்கு ரன்பீரின் தாய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: முடிந்தது முடிந்தது தான் என்று நடிகை கத்ரீனா கைஃபின் தாயிடம் நடிகர் ரன்பிர் கபூரின் தாய் நீத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரன்பிர் கபூரும், நடிகை கத்ரீனா கைஃபும் காதலித்து வந்தனர். மும்பையில் தனியாக வீடு எடுத்து லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ரன்பிர் தனது முன்னாள் காதலி தீபிகாவுடன் சேர்ந்து தமாஷா படத்தில் நடித்தார்.

What does Neetu Kapoor tell Katrina's mom?

அந்த படத்தில் நடிக்கையில் ரன்பிரும், தீபிகாவும் ஒட்டி உறவாடியது கத்ரீனாவுக்கு பிடிக்காமல் இருந்தது. இந்நிலையில் ரன்பிரும், கத்ரீனாவும் பிரிந்துவிட்டனர். கத்ரீனாவின் தாய் சூசன் தனது மகளை ரன்பிருடன் சேர்த்து வைக்க முயற்சி செய்துள்ளார்.

சூசன் ரன்பிரின் தாயும், நடிகையுமான நீத்து கபூருக்கு போன் செய்து உங்கள் மகனிடம் பேசி அவர்களை சேர்த்து வையுங்கள் என்று தெரிவித்துள்ளார். அதற்கு நீத்துவோ, முடிந்தது முடிந்தது தான் என்று கூறிவிட்டாராம்.

ரன்பிரை பிரிந்த பிறகு கத்ரீனா தனது முன்னாள் காதலரான சல்மான் கானுடன் நெருக்கமாக பழகி வருகிறார்.

English summary
Katrina Kaif's mom's effort to patch up her daughter's relationship with Ranbir Kapoor failed.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil