twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன?... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்!

    புதிதாக அமையும் அரசு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நடிகைகள் ரகுல்பிரீத்சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    |

    சென்னை: புதிய அரசிடம் தாங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து நடிகைகள் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் கருத்து தெரிவித்துள்ளனர்.

    லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி தான் முன்னிலை வகித்து வருகிறது.

    பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் புதிதாக அமையயுள்ள அரசிடம் தாங்கள் எதிர்பார்ப்பது என்பது குறித்து சில நடிகர், நடிகைகளிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறியதாவது,

    என்ஜிகே! பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா என்ஜிகே! பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா

    சாய் பல்லவியின் எதிர்பார்ப்பு

    சாய் பல்லவியின் எதிர்பார்ப்பு

    தன்னுடைய எதிர்பார்ப்பு குறித்து சாய் பல்லவி கூறியதாவது, "இங்கே ஒவ்வொரு பிரச்சினையின் போதும் சில நாட்கள் அதை பற்றி பேசுவதும், பின்னர் மறந்துவிடுவதும் தொடர்கிறது. இதற்கு பொள்ளாச்சி சம்பவம் தான் மிகப்பெரிய உதாரணம். இதுபோன்ற சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்", என்றார்.

    தவறுக்கு தண்டனை

    தவறுக்கு தண்டனை

    மேலும், "பிரச்சினைகள் மட்டும் தான் இங்கே வெளிச்சத்துக்கு வருகிறுது. தீர்வுகள் இருட்டிலேயே இருக்கிறது. தவறு செய்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்ற நிலை உருவாக வேண்டும். அது என்ன தண்டனையாக இருந்தாலும் சரி. ஆனால் தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்", என சாய் பல்லவி கூறினார்.

     ரகுலின் எதிர்பார்ப்பு

    ரகுலின் எதிர்பார்ப்பு

    ரகுல் ப்ரீத் சிங்கிடம் கேட்டபோது, "இங்கு நிலவும் பிரிவினை வாதத்தை ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் சமமான உரிமைகளை பெறவேண்டும். சாதி, மத, பிரிவினையை தடுக்க வேண்டும். அடுத்து கல்வியில் கவனம் செலுத்தவேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்", எனக் கூறினார்.

    நடிகர்கள் எதிர்பார்ப்பு

    நடிகர்கள் எதிர்பார்ப்பு

    தமிழக திரைத்துறையை சேர்ந்த சிலர் மூத்த நடிகர்களிடம் பேசியபோது, "புதிதாக அமையவுள்ள அரசு சினிமா தொழிலை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களை தடை செய்து பைரசியை ஒழிக்க வேண்டும். நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும்", என பொதுவாகக் கூறினர்.

    English summary
    Actress Sai Pallavi and Rakul Preetsingh said that they are expecting the new government to ensure the safety on women first.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X