twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவப்பு மையால் கருணாநிதி எழுதிய 'அந்த 2' வார்த்தைகள்: எஸ்.ஏ. சி. நெகிழ்ச்சி

    By Siva
    |

    சென்னை: சிவப்பு மையால் கருணாநிதி எழுதிய அந்த இரு வார்த்தைகள் குறித்து இயக்குனரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியுள்ளார்.

    உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று காலமானார். ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    What does SA Chandrasekhar say about Karunanidhi?

    இந்நிலையில் கருணாநிதி பற்றி இயக்குனரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியதாவது,

    நான் கருணாநிதியை எப்பொழுதுமே கலைஞராகவே பார்த்துள்ளேன். அவரிடம் அரசியல் பற்றி பேசியதே இல்லை. அவரை 1983ம் ஆண்டு முதன்முதலாக பார்த்தேன். அதில் இருந்து அவரை அண்ணா என்றே அழைத்து வந்தேன்.

    அவர் என் 3 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். வசனங்களை பச்சை மையால் எழுதிவிட்டு நினைத்தால் மாத்திக்கொள்ளலாம் என்று சிவப்பு மையால் எழுதி அனுப்புவார். அந்த அளவுக்கு இயக்குனர்களுக்கு மரியாதை அளித்தவர் அவர்.

    என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று அவர் கூறியது வெறும் பேச்சுக்கு அல்ல. 1980களில் அவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்தே நீதிக்கு தண்டனை படத்தை எடுத்தேன் என்றார்.

    English summary
    Director cum actor SA Chandrasekhar has shared an incident to explain how DMK supremo Karunanidhi gave respect to directors.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X