விஜய் நல்ல நடிகர் இல்லையா?: சித்திக், உண்மையில் என்ன தான் சொன்னார்?

By Siva

Recommended Video

Siddique: விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம்,ஆனால் நல்ல நடிகர் இல்லை- வீடியோ

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் சித்திக் விஜய்யின் நடிப்பை பற்றி தெரிவித்தது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாம்.

பார்வதியின் உயரே மலையாள படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்தவர் சித்திக். அவர் அண்மையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் விஜய் நல்ல நடிகர் இல்லை என்றார்.

அவர் பேசியதை பார்த்த விஜய் ரசிகர்கள் கொந்தளித்து அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

விஜய்

விஜய்

விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், ஆனால் அவர் நல்ல நடிகர் இல்லை. தமிழ் திரையுலகில் உள்ள கமல் ஹாஸன் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டும் அல்ல நல்ல நடிகரும் கூட என்று சித்திக் கூறியதால் தளபதி ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.

விமர்சனம்

விமர்சனம்

விஜய் நல்ல நடிகர் இல்லை என்று சித்திக் கூறவில்லையாம். விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கும்போதிலும் அவரை ஒரு நல்ல நடிகர் என்று "எப்பொழுதுமே" கூற முடியாது என்று தான் சித்திக் கூறினாராம். மறுபடியும் அதே தானே பாஸ் சொல்றீங்க என்று நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

விஜய் எப்படி நடிப்பார் என்பது எங்களுக்கு தெரியும். அதை யாரும் விமர்சிக்கத் தேவையில்லை என்று தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். மேலும் சித்திக்கை அவர் வேலையை மட்டும் பார்க்குமாறு கூறியுள்ளனர்.

மலையாள திரையுலகம்

மலையாள திரையுலகம்

மம்மூட்டி, மோகன்லால் ஆகிய இருவரும் சூப்பர் ஸ்டார்கள் மட்டும் அல்லாமல் நல்ல நடிகர்களாகவும் இருப்பதற்கு மலையாள திரையுலகம் அதிர்ஷ்டம் செய்துள்ளது என்பதை தெரிவிக்க சித்திக் விஜய்க்கு சரியாக நடிக்க வராது என்று கூறி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X