'தாமிரபரணி' பானு இப்போது கேரளாவில் என்ன செய்கிறார் தெரியுமா?

By Vignesh Selvaraj

Recommended Video

விஜய்யின் 'கத்தி' Vs நயன்தாராவின் 'அறம்'- வீடியோ

சென்னை : 'தாமிரபரணி' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை பானு. அந்தப் படத்தின் மூலம் நல்ல நடிகை எனப் பெயர் பெற்றார்.

அதன் பிறகு 'அழகர்மலை', 'மூன்றுபேர் மூன்று காதல்' என இவர் நடித்த சில படங்கள் பெரியளவில் வெற்றி பெறாததால் மலையாளத்தில் தான் அதிகமாக நடித்து வந்தார்.

தற்போதும் ஒன்றிரண்டு படங்களில் நடித்து வரும் பானு, கொச்சியில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.

தாமிரபரணி பானு

தாமிரபரணி பானு

தமிழ் சினிமாவில் விஷாலுக்கு ஜோடியாக 'தாமிரபரணி' படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தவர் பானு. எல்ஜா ஜார்ஜ் எனும் இயற்பெயர் கொண்ட இவர் மலையாள சினிமாவுக்காக முக்தா ஜார்ஜ் என பெயர் மாற்றிக்கொண்டார். தமிழில் நடிப்பதற்காக பானு என மாற்றிக்கொண்டார்.

சில படங்களால் சறுக்கல்

சில படங்களால் சறுக்கல்

'தாமிரபரணி' பாணுவாகத்தான் இவரை ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். 'தாமிரபரணி' படத்துக்குப் பிறகு அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. அதனால் ஓரிரு படங்களில் நடித்தவர், பின்னர் மலையாள படங்களில் கவனம் செலுத்தினார்.

மலையாளத்தில் கவனம்

மலையாளத்தில் கவனம்

அதன் பிறகு, 'சட்டப்படி குற்றம்' என்ற படத்துக்காக, மீண்டும் தமிழுக்கு வந்த பானு, 'மூன்றுபேர் மூன்று காதல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அவையும் பெரியளவில் வெற்றி பெறாததால் மலையாளத்தில் தான் கவனம் செலுத்தி வந்தார்.

அண்ணி வேடத்தில்

அண்ணி வேடத்தில்

'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்தார். கடந்த ஆண்டு வெளியான 'பாம்பு சட்டை' படத்தில் பாபி சிம்ஹாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார் பானு. திருமணம் ஆனாலும், சினிமாவிலிருந்து முழுமையாக ஒதுங்காமல் நடித்து வருகிறார்.

திருமணம்

திருமணம்

குடும்ப வாழ்க்கையில் நுழைய விரும்பிய இவருக்கு, கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மலையாள சினிமாவில் பாடகியும், தொகுப்பாளினியுமான ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியைத்தான் பாணு திருமணம் செய்துகொண்டார்.

அழகான குழந்தை

அழகான குழந்தை

திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்த இந்த தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கியாரா எனப் பெயர் சூட்டியுள்ளனர். குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார் பானு.

பியூட்டி சலூன்

பியூட்டி சலூன்

பியூட்டி சலூன் பாணு பயிற்சி பெற்ற கிளாசிக் டான்சரும் கூட. பல மேடைகளில் ஆடிப் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். பானு சொந்தமாக பலரிவோட்டம் எனும் இடத்தில் அழகு நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறார். நடிக்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில் இந்த பிஸினஸில் தான் கவனம் செலுத்துகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X