பிரசாந்த்தால் அஜித் அவமானப்படுத்தப்பட்டாரா? உண்மையை போட்டு உடைத்த தியாகராஜன் !!

சென்னை : நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை,வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் 61வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

போடா போடி,நானும் ரவுடிதான், தானாசேர்ந்தகூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் 62 வது படத்தில் நடிக்க உள்ளார்

இந்த நிலையில் பிரசாந்த் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தில் அஜித் தலைகுனிந்தவாறு நிற்கும் காட்சிக்குப் பின்னாலுள்ள காரணத்தை காலகாலமாக பலரும் வெவ்வேறு விதமாக பேசி வந்தனர். இதற்க்கு நடிகர் தியாகராஜன் தனியார் யூடியூப் சேனலில் பல உண்மைகளை பகிர்ந்துள்ளார்.

பெண்கள் மீதான வன்கொடுமை

பெண்கள் மீதான வன்கொடுமை

நடிகர் அஜித்திற்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவருடன் தொடர்ந்து பணியாற்றி வருவது வழக்கம் அந்த வரிசையில் சரண்,சிறுத்தை சிவாவை தொடர்ந்து இப்பொழுது ஹெச் வினோத் இணைந்துள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என இயக்கிய இரண்டே திரைப்படங்களில் ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த வினோத் அஜித் உடன் முதன் முறையாக கூட்டணி அமைத்த திரைப்படம் நேர்கொண்டபார்வை இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய பிங்க் திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக வெளியான நேர்கொண்ட பார்வையில் அஜித் வயதான தோற்றத்தில் நடித்து அசத்தியிருப்பார். மிகவும் சுவாரசியமாக எடுக்கப்பட்ட இந்தப்படம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து ஆணித்தரமாக பேசியிருந்தது.

ஹாலிவுட் தரத்தில்

ஹாலிவுட் தரத்தில்

நேர்கொண்ட பார்வை தொடர்ந்து அஜித்துடன் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் வலிமை. போனிகபூரின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வந்த இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது ஹாலிவுட் தரத்தில் சண்டைக்காட்சிகள் வியக்கவைக்கும் பைக் ரேஸ் காட்சிகள் என பிரமாதப்படுத்தி ஹெச் வினோத் மீண்டும் அஜித் கூட்டணியில் இணைகிறார். அஜித்தின் 61 வது படத்தை இயக்க இருப்பது உறுதியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 62 வது படத்தில் அஜித் நடிக்கிறார்

அஜித் அவமானப்படுத்தப்பட்டாரா

அஜித் அவமானப்படுத்தப்பட்டாரா

கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் எந்த ஒரு தொலைக் காட்சிகளுக்கும் பேட்டி அளிப்பது இல்லை அதனாலேயே அவரை சுற்றி பல விமர்சனங்களும் சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் பரவி கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் பிரசாந்த் மாலையுடன் அஜித் தலைகுனிந்தவாறு நிற்கின்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாக்களில் வைரலாகி பலரும் அந்த நிகழ்வின் போது அஜித்திற்கு மாலை அணிவிக்காமல் பிரசாந்துக்கு மட்டும் மரியாதை கொடுக்கப்பட்டது அந்த நிகழ்ச்சியில் அஜித் அவமானப்படுத்தப்பட்டார் என கூறிவந்த நிலையில் அதன் உண்மையான காரணத்தை பிரசாந்தின் அப்பாவும் இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்

தியாகராஜன் விளக்கம்

தியாகராஜன் விளக்கம்

இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரசாந்த்தின் பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம். அப்படி ஒரு தினத்தில் தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரசாந்த்தின் பிறந்தநாள் தினத்தன்று ரசிகர்கள் அவருக்கு மாலை அணிவித்து இருந்தார்கள் அவ்வளவு தான். அஜித் மாலையுடன் இல்ல்லாமல் இருந்த தருணங்களில் எடுக்க பட்ட போட்டோ கிளிக்ஸ் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.இந்த மாலை, மரியாதை எல்லாம் நடிகர்களுக்கு பல மேடைகளில் வரும் போகும்,இதை பெரிதாக பேச ஒன்றும் இல்லை என சர்ச்சைக்குரிய புகைப்படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் தியாகராஜன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X