ஒரு வாய் சாப்பாடு சாப்பிட முடியாம பண்ணிட்டீங்களே 'கேப்டன்'.. இது நியாயமா??
சென்னை: சாப்பாட்டு நேரத்தைத் தாண்டியாச்சே.. டிவி பார்த்துக்கிட்டே சாப்பிடலாம்னு போனா.. இப்படியா... டிவியைப் போட்டதுமே.. டமார் டமார்னு ஒரே சத்தம்.. கேப்டன் விஜயகாந்த் போட்ட சண்டைதான் அது.
டிடிஎஸ் எபக்ட்டில் நூதனமான முறையிலான சத்தத்துடன் கூடிய சரியான சண்டை..
திடீர்னு உங்க முன்னாடி பத்து பதினைந்து பேர் கட்டி உருண்டால் உங்களுக்கு எப்படி இருக்கும் .. அந்த எபக்ட்தான் டிவியைப் போட்டதுமே கிடைத்தது.

'லெக்பீஸ்' பைட்
அது ஒரு லெக் பீஸ் பைட்.. காரணம். சண்டை போட்ட விஜயகாந்த் உள்ளிட்ட அத்தனை பேருமே காலை தலை வரை தூக்கி தூக்கி அடித்தார்கள்.

ஒரு கையால் தூக்கி அங்கே போடு
ஒரு பைட்டரை, விஜயகாந்த் அப்படியே கையில் தூக்கி, அதாவது அரிசி மூட்டையைப் பிடித்துத் தூக்குவது போல தூக்கி அப்படியே வீசுகிறார். அவரும் செம ஸ்பீடில் போய் விழுகிறார்... ஒரு மாட்டு வண்டி தரிசாகிறது...!

காலைத் தூக்கி தலையில் ஒரே அடி..
அதேபோல இன்னொரு பக்கம் தனது காலைத் தூக்கி அப்படியே எதிரில் தன்னை அடிக்க முனைபவரை தலையில் பார்த்து ஒரே அடி.. அந்த ப்ளூ சட்டைக்காரன் போய் விழுந்தான் பத்து பர்லாங்கு தொலைவுக்கு!.

ஆனந்தராஜுக்கு நங்கு நங்குன்னு நாலு அடி
காரில் வேகமாக வரும் வி்ல்லன் ஆனந்தராஜும் தன் பங்குக்கு விஜயகாந்த்தை நாலு சாத்து சாத்த வருகிறார். விடுவாரா கேப்டன்.. பிடித்து நாலு அடி நங்கு நங்கென்று வைக்கிறார். மாட்டு வண்டி சக்கரத்தில் தலையை வைத்து மோத விட்டு உதார் காட்டுகிறார்.

சாப்பாடு இறங்கலையே...!
இப்படி ஒரு அதிரடியான, அதி வேகமான சண்டைக் காட்சியை திடீரென்று பார்த்ததால் சாப்பாடே வாயில் இறங்கல.. தட்டைத் தூக்கிய அதே வேகத்தில் கைக்கு வந்ததை வாய்க்குள் திணித்து விட்டு எடுத்த ஓட்டம்தான்....!
படத்தோட பேரு எங்கள் அண்ணா.. 'கிலி பரப்பியது' சன் டிவி... போய் பார்த்து நீங்களும் பயப்படுங்கப்பா... நமீதா சீன் வர்றப்ப சாப்பிட போயிருக்கக் கூடாதா...!


Click it and Unblock the Notifications











