»   »  ஐஸ்வர்யா ராயின் இடுப்பு, கால்களுக்கு என்னாச்சு?: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்

ஐஸ்வர்யா ராயின் இடுப்பு, கால்களுக்கு என்னாச்சு?: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
போட்டோஷாப்பின் மூலம் ஒல்லியான ஐஸ்வர்யா ராய்!

மும்பை: பிரபல பத்திரிகையின் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராயை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

பிரபல பத்திரிகை நடத்திய போட்டோஷூட்டில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். பல்வேறு உடைகள் அணிந்து அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர்.

கால்கள்

கால்கள்

இந்த புகைப்படத்தை அருமையாக போட்டோஷாப் செய்துள்ளனர். ஐஸ்வர்யாவின் கால்களை காணவில்லை. அவர் நிஜத்தை விட இதில் ஒல்லியாக உள்ளார் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை

பத்திரிகை

புகைப்படத்திற்காக அவர்கள் புதிய ஐஸ்வர்யா ராயை உருவாக்கியுள்ளனர். போட்டோஷாப்பிற்கும் ஒரு எல்லை உண்டு என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

உண்மை

உண்மை

ஐஸ்வர்யா ராய் மீண்டும் போட்டோஷூட்டில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. ஆனால் அவரின் நிஜ புகைப்படங்களை பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.

கால்கள்

கால்கள்

நிஜத்தை விட இந்த புகைப்படங்களில் ஐஸ்வர்யா ஒல்லிக்குச்சியாக உள்ளார். அவரின் இடுப்பு மற்றும் கால்களுக்கு என்ன ஆனது என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொய்

பொய்

ஐஸ்வர்யா ராய் நிஜத்தில் இப்படி இல்லை. புகைப்படத்திற்காக இப்படி ஒல்லியாக காண்பித்துள்ளனர். அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் இப்படி இருந்தார் என்று ஒருவர் நொந்துள்ளார்.

English summary
Aishwarya Rai Bachchan's latest photoshoot for Vogue is all over the social media. While, some fans are swooning over the stunning look of Aishwarya Rai Bachchan, some are busy in claiming that the pictures of Mrs Bachchan are photoshopped as they can't see her 'hips or legs'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X