நடந்தது என்ன? பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற காரணம் இதுதான்.. வெளியானது தகவல்!

சென்னை: பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் விலகுவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

Recommended Video

BB Jodigal Shoot ஆரம்பிச்சாச்சு, விதிமுறைகளை மீறாமல் நடக்கும் Shooting | AnithaSampath,Ramyakrishnan

விஜய் டிவியில் கடந்த மே மாதம் முதல் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக இந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் ஜோடிகள்

பிக்பாஸ் ஜோடிகள்

அதன்படி வனிதா- சுரேஷ் சக்கரவர்த்தி ஒரு ஜோடியாகவும், ஷிவானி நாராயணன் - சோம் சேகர் ஒரு ஜோடியாகவும் பங்கேற்றுள்ளனர். இதேபோல் கேபி - ஆஜித் ஒரு ஜோடியாகவும் அறந்தாங்கி நிஷா- தாடி பாலாஜி, ஷாரிக் - அனிதா சம்பத் ஆகிய ஜோடிகளும் பங்கேற்றுள்ளனர்.

சம்யுக்தா- ஜித்தன் ரமேஷ்

சம்யுக்தா- ஜித்தன் ரமேஷ்

மேலும் ஜூலி - சென்ட்ராயன் ஒரு ஜோடியாகவும் சம்யுக்தா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஒரு ஜோடியாகவும் பங்கேற்றுள்ளனர். ஃபாதிமா பாபு - மோகன் வைத்யா ஒரு ஜோடியாகவும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

விலகும் வனிதா

விலகும் வனிதா

இதில் நடுவர்களாக நடிகை ரம்யா கிருஷ்ணனும் நடிகர் நகுலும் உள்ளனர். நடிகை ரம்யா கிருஷ்ணன், வனிதாவின் நடனத்தை புகழ்ந்து பேசிய ப்ரோமோக்கள் வெளியான நிலையில் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகுவதாக வனிதா தெரிவித்தார்.

அவமானப்படுத்தப்படுகிறேன்

அவமானப்படுத்தப்படுகிறேன்

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் அவமானப்படுத்துவது, கொடுமைப்படுத்துவது முதலானவற்றை நான் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறேன். எனது குடும்பமாகவே இருந்தாலும் அதனை எதிர்கொள்வேன் என்பதை உலகமே அறியும். பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு, விஜய் டிவி எனக்கு மற்றொரு வீடாக இருந்து வருகிறது.

பொறுக்க முடியாத சிலர்

பொறுக்க முடியாத சிலர்

சேனலோடு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்ற போதும், பணியிடத்தில் நிகழும் மோசமான தாக்குதல்களையும், துன்புறுத்தல்களையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனது தொழில்முறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரால் நான் அவமானப்படுத்தப்பட்டதோடு, எனக்கு அநீதி இழைக்கப்பட்டது.

பொறாமை பிடித்த பெண்

பொறாமை பிடித்த பெண்

பணியிடங்களில் பெண்களை மோசமாக நடத்துவது ஆண்கள் மட்டுமல்ல; பொறாமை பிடித்த பெண்களும்தான். எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் ஒழிக்க முயல்கிறார்கள். பல ஆண்டுகள் அனுபவம்மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

செட்டில் என்ன பிரச்சனை?

செட்டில் என்ன பிரச்சனை?

வனிதாவின் இந்த அறிக்கையை பார்த்த ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணனுடன் ஏதோ பிரச்சனை என கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வனிதாவுக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் பிக்பாஸ் ஜோடிகள் செட்டில் நடந்த பிரச்சனை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

10க்கு ஒரு மார்க்

10க்கு ஒரு மார்க்

அதாவது ஒரு எபிசோடில் வனிதாவின் பர்ஃபாமன்ஸுக்கு ரம்யா கிருஷ்ணன் 10க்கு ஒரு மார்க் மட்டுமே வழங்கியதாக தெரிகிறது. மேலும் அவரது பர்ஃபாமன்ஸை பார்த்து ரம்யா கிருஷ்ணன் கொடுத்த கமெண்ட்ஸும் வனிதாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

வெளியேறுவதாக அறிவிப்பு

வெளியேறுவதாக அறிவிப்பு

தன்னுடைய பர்ஃபாமன்ஸுக்கு ஒரே ஒரு மார்க் வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாத வனிதா, ரம்யா கிருஷ்ணன் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகவும் வேண்டுமென்றே தனது மதிப்பெண்ணை குறைத்துவிட்டதாகவும் கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: biggboss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X