காடுகளை அழித்தால் என்னவாகும்.. சமூக பிரச்சினையைப்பற்றி பேசிய ''வனம்'' தியேட்டர்கள் அதிகரிப்பு

சென்னை : அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் வனம்

8 தோட்டாக்கள், ஜீவி,கேர் ஆப் காதல் போன்ற படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த நடிகர் வெற்றி இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்

பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் வெளியான வனம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க வனம் மற்றும் காடுகளின் முக்கியத்துவத்தை பற்றி ஆணித்தரமாக கூறியுள்ளது.

ஃபேண்டசி கலந்த திகில்

ஃபேண்டசி கலந்த திகில்

இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஸ்ரீகண்டன் ஆனந்த் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் வனம். பல குறும்படங்களை இயக்கி விருதுகளை வென்ற ஸ்ரீகண்டன் இப்பொழுது வனம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் தடத்தை பதித்துள்ளார். ஃபேண்டசி கலந்த திகில் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் 8 தோட்டாக்கள், ஜீவி,கேர் ஆஃப் காதல் உள்ளிட்ட படங்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் வெற்றி ஹீரோவாக நடித்துள்ளார்

பழங்குடியின மக்களை பற்றி

பழங்குடியின மக்களை பற்றி

அனு சித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட், வேல ராமமூர்த்தி மற்றும் அழகம் பெருமாள் உள்ளிட்டோர் இன் படத்தில் நடித்துள்ளனர். கோல்டன் ஸ்டார்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ரான் ஈதன் யோஹான் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. டீசரில் இந்த திரைப்படம் திகில் திரைப்படமாக கட்டப்பட்டிருந்தாலும் வனம் பற்றியும் பழங்குடியின மக்களை பற்றியும் மிகவும் ஆணித்தரமாக இந்த திரைப்படம் பேசியுள்ளது.

அட்டகாசமாக திரைக்கதை

அட்டகாசமாக திரைக்கதை

இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் ஒரு அறிமுக இயக்குனர் என்ற பீலே எந்த ஒரு இடத்திலும் கொடுக்கவில்லை. அந்த அளவிற்கு இப்படத்தின் திரைக்கதை மிக அட்டகாசமாக அமைக்கப்பட்டிருந்தது. வெற்றி,அனு சித்தாரா மற்றும் ஸ்ம்ருதி வெங்கட், வேல ராமமூர்த்தி, அழகம் பெருமாள் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர்.

Recommended Video

Vanam Movie Review | Yessa? Bussa? | Vetri | Smruthi Venkat | Srikantan Anand | Filmibeat Tamil
தனி இடத்தை பெற்றுள்ளது

தனி இடத்தை பெற்றுள்ளது

திகில் திரைப்படமாக வெளியான வனம் அதேசமயம் மலைகளை பற்றியும் பழங்குடியின மக்களை பற்றியும் முன்னேற்றம் என்ற பெயரில் வனங்கள் எப்படி அழிக்கப்படுகின்றது என்பது பற்றியும் மிக ஆணித்தரமாக இப்படம் கூறியுள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் இருக்கையின் நுனியில் உட்கார வைக்கிறது. படம் முழுவதும் விறுவிறுப்பாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் ஓடிக் கொண்டிருக்கும். இயக்குனர் ஸ்ரீகண்டன் முதல் படைப்பிலேயே மிகச் சிறந்த படத்தைக் கொடுத்துள்ளார் என ரசிகர்களின் பாராட்டுக்கள் இப்படத்தின் மீது உள்ளது. படம் என்பதைத் தாண்டியும் மலைகளையும் அதன் வளங்களையும் பற்றிய வனம் பேசுவதால் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X