அட்லி, ஷாருக்கான் சந்திப்பு: விஜய் ரசிகாஸ், உங்களுக்கு ஒரு 'குட் நியூஸ்'
Recommended Video

சென்னை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அட்லி அலுவலகத்திற்கு சென்றது குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டியை பார்க்க சென்னை வந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இயக்குநர் அட்லியின் அலுவலகத்திற்கு சென்றார்.
போட்டியின்போது அட்லி ஷாருக்கான் அருகே அமர்ந்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்தது.

ஷாருக்கான்
தளபதி 63 படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்குமாறு அட்லி ஷாருக்கானிடம் கேட்டிருக்கக்கூடும் என்று விஜய் ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் அட்லி அலுவலகத்தில் அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

மெர்சல் ரீமேக்
அட்லி ஷாருக்கானை வைத்து படம் இயக்க விரும்புகிறார். தனது அலுவலகத்தில் வைத்து அவரிடம் 2 ஸ்க்ரிப்ட்டை கொடுத்துள்ளார். அதில் ஒன்று மெர்சல் இந்தி ரீமேக். ஷாருக்கானுக்கு இரண்டு ஸ்க்ரிப்டுகளுமே பிடித்துள்ளதாம்.

பாலிவுட்
ஷாருக்கானுக்கு மெர்சல் ரீமேக் பிடித்திருந்தாலும் அட்லி சொன்ன அந்த புதுக்கதை மிகவும் பிடித்துள்ளதாம். அந்த புதுக்கதை ஸ்க்ரிப்ட் பணிகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளாராம் அட்லி.

கூட்டணி
அட்லி, ஷாருக்கான் கூட்டணியில் நிச்சயம் படம் வரும் என்று கூறப்படுகிறது. பாலிவுட்டில் தற்போது ஷாருக்கானின் நிலைமை சரியில்லை. அவரின் படங்கள் தொடர்ந்து சரியாக ஓடாத நிலையில் புது இயக்குநருடன் வேலை பார்க்க ஆர்வம் காட்டுகிறார் அவர்.


Click it and Unblock the Notifications











