கவின் லாஸ்லியா காதல் உண்மையானதா.. ஏமாற்றியது யார்? வெளியான பரபரப்பு தகவல்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் லாஸ்லியா காதல் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மூன்றாவது சீசன் கடந்த ஆண்டு ஒளிபரப்பானது.

இதில் பங்கேற்றவர் இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. ஆரம்பத்தில் அமைதியாய் இருந்த இடம் தெரியாமல் இருந்தார்.

சாக்ஷியுடன் காதல்

சாக்ஷியுடன் காதல்

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே கவினுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். கவினும் சாக்ஷியும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தே அவருடன் ஓவர் நெருக்கம் காட்டினார். கவினுடன் எப்போதும் பேச வேண்டும் என்றே விருப்பம் காட்டினார் லாஸ்லியா.

லாஸ்லியாவுடன் காதல்

லாஸ்லியாவுடன் காதல்

லாஸ்லியாவே நெருங்கி வந்து பழகியதால், சாக்ஷியுடனான காதலுக்கு எண்ட் கார்டு போட்டார் கவின். அதன் பிறகு இருவரும் காதலிக்க தொடங்கினர். ஆரம்பம் முதலே சக போட்டியாளரான இயக்குநர் சேரனை சேரப்பா சேரப்பா என்று அழைத்து வந்த லாஸ்லியா, கவினுக்காக அவரை விட்டுக் கொடுத்தார்.

பெற்றோர் எதிர்ப்பையும் மீறி

பெற்றோர் எதிர்ப்பையும் மீறி

சேரனுடன் பேசுவதையும் தவிர்த்தார். சேரன் மட்டுமின்றி பெரும்பாலான ஹவுஸ்மேட்டுகளிடமும் பேசுவதை தவிர்த்த லாஸ்லியா, கவின் மட்டுமே உலகம் என்றிருந்தார். தனது பெற்றொர் கவினுடனான காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் அவருடன் பழகுவதை நிறுத்தவில்லை லாஸ்லியா.

கதறி அழுத லாஸ்லியா

கதறி அழுத லாஸ்லியா

ஒரு கட்டத்தில் கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது கூட கதறி அழுத லாஸ்லியா, நானும் வருகிறேன் என்று அடம்பிடித்தார். தன்னையும் வெளியேற்றும்படி பிக்பாஸிடம் முறையிட்டார்.

கன்டென்ட் காதலா

கன்டென்ட் காதலா

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போதும் இருவரும் ஒருவருக்கொருவர் ஏறேடுத்து கூட பார்த்துக் கொள்ளவில்லை. இதனால் இருவரும் உண்மையிலேயே காதலித்தார்களா அல்லது கன்டென்ட் காதலா என கேள்விகள் எழுந்தன.

இருவரின் காதலும் உண்மையா?

இருவரின் காதலும் உண்மையா?

ஆனால் இருவருமே இதுவரை தங்களின் காதல் குறித்து எதுவுமே பேசவில்லை. இந்நிலையில் இருவரின் காதலும் உண்மையா என்பது குறித்த தகவல்களை இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

கவினின் நாடகம்

கவினின் நாடகம்

அதன்படி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கவின் லாஸ்லியாவை உண்மையிலேயே காதலிப்பது போல் நடந்து கொண்டுள்ளார். கவினை லாஸ்லியா காதலிக்காத போதும் அவரை நம்பி, அவருடன் பழகினாராம் லாஸ்லியா.

நம்ப தகுந்த வட்டாரம்

நம்ப தகுந்த வட்டாரம்

ஆனால் கவினோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீடிக்கவும், அதன் மூலம் பெரும் பிரபலமாகவும் தான் லாஸ்லியாவை காதலிப்பது போல் நடித்ததாகவும் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் மலர்ந்தது

காதல் மலர்ந்தது

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கவின் லாஸ்லியாவுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, லாஸ்லியாவின் அழகு கலை நிபுணராக பணியாற்றிய பெண் ஒருவருடன் கவினுக்கு தற்போது காதல் மலர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் ஏமாற்றம்

பெரும் ஏமாற்றம்

கவினுடைய காதல் உண்மை என்று நம்பிய லாஸ்லியாவுக்கு, கவின் தன்னுடனான தொடர்பை துண்டித்தது பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு லாஸ்லியாவின் தந்தை மரிய நேசன் கனடாவில் மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X