ஸ்மோக்கிங் ரூமில் பாலாவுடன் என்ன நடந்தது? தம் அடிக்கும் பழக்கம் ஏன்? மனம் திறந்த அபிராமி!

சென்னை: தம் அடிக்கும் பழக்கம் குறித்தும் ஸ்மோக்கிங் ஏரியாவில் பாலாவுடன் என்ன நடந்தது என்கிற கேள்விகளுக்கு செம ஓப்பனாக பதில் அளித்துள்ளார் பிக் பாஸ் பிரபலம் அபிராமி.

பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட அபிராமி முகேன் ராவை துரத்தி துரத்தி காதலித்ததும் ஆனால், அவர் வேண்டாம் என ஒதுங்கி சென்றதையும் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்ட அபிராமிக்கும் நிரூப்புக்கும் ஏற்கனவே பிரேக்கப் ஆன விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஸ்மோக்கிங் ரூமில் கன்றாவி

ஸ்மோக்கிங் ரூமில் கன்றாவி

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஸ்மோக்கிங் ரூமில் காமக்களியாட்டம் நடைபெறுவதாக வெளியான தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து வனிதா விஜயகுமார் மற்றும் கமல் அடுத்தடுத்து வெளியேறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாலாவுக்கும் அபிராமிக்கும் புதிய கனெக்‌ஷன் உருவானது என பல வதந்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.

நிரூப்பின் எக்ஸ்

நிரூப்பின் எக்ஸ்

பிக் பாஸ் சீசன் 3ல் முகேன் ராவை துரத்தி துரத்தி காதலித்த நடிகை அபிராமி பிக் பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்ற போது தானும் நிரூப்பும் முன்னாள் காதலர்கள் என்கிற பகீர் உண்மையை போட்டு உடைத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். ஏற்கனவே நிரூப்பும் யாஷிகா ஆனந்தும் முன்னாள் காதலர்கள் என்கிற அதிர்ச்சியில் இருந்தே வெளிவராத ரசிகர்களுக்கு அது மேலும், ஒரு அதிர்ச்சியாக இருந்தது.

ஸ்மோக்கிங் ரூமில் என்ன நடந்தது

இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் அபிராமி கலந்துரையாடிய போது ஒரு ரசிகர் ஸ்மோக்கிங் ரூமில் உங்களுக்கும் பாலாவுக்கும் அப்படி என்ன நடந்தது என்கிற கேள்வியை முன் வைக்க, சிரித்தபடி அங்கே ஒன்றுமே நடக்கவில்லை. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் நானும் சமூக வலைதளத்தில் சில வேடிக்கையான விஷயங்களை பார்த்தேன். எப்படித்தான் இப்படி கிளப்புறாங்களோ தெரியவில்லை. அத்தனை பேர் பார்க்கும் ஒரு ஷோவில் கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாமல் யாராவது அப்படி நடந்து கொள்வார்களா என கேட்டுள்ளார்.

புகை பிடிக்கும் பழக்கம்

புகை பிடிக்கும் பழக்கம்

மற்றொரு ரசிகர் அபிராமியின் புகை பிடிக்கும் பழக்கம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த அபிராமி பிக் பாஸ் வீட்டில் அவ்வளவு டென்ஷன் உண்டாகும், சிலரை தவிர பலரும் யார் என்றே உங்களுக்குத் தெரியாது. அதனை கூல் பண்றதுக்குத்தான் புகைப் பிடித்தேன். ஏன் இந்த கேள்வியை என்னை பார்த்து கேட்கிறீங்க, அந்த ஷோவில் தம் அடித்த ஆண் போட்டியாளர்களை பார்த்து ஏன் கேட்கவில்லை என பதிலுக்கு கேள்வி எழுப்பிய அபிராமி, என் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது யாருடைய பிசினஸும் இல்லை என காட்டமாக அளித்துள்ள பதில் சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

நிரூப் ஆர்மி பார்த்த வேலையா

நிரூப் ஆர்மி பார்த்த வேலையா

பாலாஜி முருகதாஸ் டைட்டில் வின் பண்ணக் கூடாது என்பதற்காக நிரூப் ஆர்மியினர் பார்த்த வேலை தான் இது என பாலாஜி முருகதாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளுத்து வாங்கி வருகின்றனர். மேலும், நிரூப் ரன்னர் அப்பாக கூட வரத் தகுதி இல்லை என்றும், ரம்யா பாண்டியன் தான் ரன்னர் அப் ஆகியிருக்க வேண்டும் என்றும் பாலாஜி முருகதாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X