வியர்க்கிறது இதோ வரேன்..மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள் டப்பிங் ரூமில் நடந்தது என்ன!

சென்னை: நடிகர் மாரிமுத்துவின் உடலைப் பார்த்து நடிகர் நடிகைகள் கதறி அழுது வருகின்றனர்.

ஏய்... இந்தாம்மா என்ற வசனத்தின் மூலம் உச்சம்தொட்ட மாரிமுத்துவின் மரணம் திரைப்பிரபலங்களை மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

வழக்கமாக நடிகர்கள் இறந்துவிட்டால், பிரபலங்கள் கண்ணீருடன் நின்று கொண்டு இருப்பார்கள். ஆனால், மாரிமுத்துவின் மரணத்திற்கு பொதுமக்களும் சாரை சாரையாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டு கண்ணீருடன் நிற்பதை பார்க்க முடிகிறது.

What happened in the last minutes of actor Marimuthus dubbing room

வியர்கிறது: எதிர்நீச்சலில் மாரிமுத்துவின் தம்பியாக நடிக்கும் கமலேஷ் பேசுகையில், டப்பிங்கின் போது நான் தான் அவருடன் இருந்தேன். அப்போது, எனக்கு வியர்கிறது வெளியே போய்விட்டு வருகிறேன் என்றார். நானும் காற்று வாங்கி விட்டு திரும்பி வந்து விடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால், அவரே தனியாக காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

கடைசி நிமிடம்: மருத்துவமனைக்கு சென்ற அவரால், மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை, மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் தான் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டே இருந்த போது அவரது உயிர்பிரிந்து விட்டது. அவரது மகள் தான் எங்களுக்கு தகவல் கொடுத்தார். எல்லாமே கொஞ்ச நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. இவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கமலேஷ் கலங்கிய கண்ணீருடன் கூறியுள்ளார்.

2 மணி நேரம் டப்பிங் பேசினார்: அதே மாரிமுத்து டப்பிங் பேசிய இடத்தில் இருந்த ஆடியோ இன்ஜினியர் கார்த்திக், அவர் காலையில் 6 மணிக்கு டப்பிங் பேச வந்தார். வரும் போது எந்தவிதமான பிரச்சனையும் அவருக்கு இல்லை, 6 மணியில் இருந்து 8 மணி வரை டப்பிங் பேசிக்கொண்டு தான் இருந்தார். திடீரென ஒரு மாதிரியா இருக்கு வெளியில் போய்விட்டு வருகிறேன் என்றார். இதற்குள் இப்படியாகி விட்டது என்றார்.

சொந்த ஊரில் இறுதிச்சடங்கு: நடிகர் மாரிமுத்துவின் உடல் மதியம் 3 மணி வரை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என்று சொல்லப்படுகிறழ. அவரது மறைவு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X