செயலற்றுப்போன உறுப்புகள்.. மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு.. 15 நாட்களாய் படாதபாடு பட்ட வடிவேல் பாலாஜி!
சென்னை: நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் கடந்த 15 நாட்களாய் பட்ட பாடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று பகல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார்.
அவரது மறைவு திரைத்துறை பிரபலங்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு உறுப்பாய்
42 வயதான நடிகர் வடிவேல் பாலாஜிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே அவருடைய கை கால்கள் என ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்தது. இதனால் உடலை அசைக்க கூடிய முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டார் வடிவேல் பாலாஜி.

5 வருடங்களுக்கு முன்பே
மாரடைப்போடு வடிவேல் பாலாஜிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவரது உடல் உறுப்புகள் செயலிழந்துள்ளது. மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இறுதியில் மரணம்
அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கடுமையான மாரடைப்பு ஏற்பட முடங்கிப்போய்விட்டார் வடிவேல் பாலாஜி. இதயம், மூளை, உடல் உறுப்புகள் என ஒவ்வொன்றாய் அதனுடைய ஃபங்ஷனை குறைக்க இறுதியில் நேற்று மரணத்தை தழுவி விட்டார்.

கலைஞர்கள் வேதனை
கடந்த 15 நாட்களாய் கை, கால்கள் செயலிழந்து படாத பாடு பட்டுள்ளார் நடிகர் வடிவேல் பாலாஜி. ஒரு மனிதனின் மரணம் இவ்வளவு கொடூரமானதாய் இருக்கக் கூடாது என அவருடன் பணிபுரிந்த சக கலைஞர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

இயல்பில் மாறவில்லை
சிறுவயது முதலே ஃபுட் பால் பிளேயராக சேத்துப்பட்டு பகுதியில் வலம் வந்த நடிகர் வடிவேல் பாலாஜி, விஜய் டிவி பிரபலமாக உயர்ந்த போதும் தன் இயல்பில் இருந்து மாறாமல் இருந்துள்ளார். எப்போதும் போல எல்லோரிடமும் சகஜமாகவே பழகி வந்துள்ளார்.

பிரபலங்கள் அஞ்சலி
அதுவே அவரது மரணம் சேத்துப்பட்டு பகுதிக்கே பேரிழப்பு என அப்பகுதி மக்கள் சொல்ல காரணம். பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் வடிவேல் பாலாஜியின் உடல் இன்று மாலை நுங்கம்பாக்கம் இடுக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











