Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சோர்வாய் இருந்ததால் காலையில் உடற்பயிற்சி செய்யவில்லை..திடீரென மயங்கி விழுந்த விவேக்..நடந்தது என்ன?
சென்னை: நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காலை நடந்தது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்பவர் நடிகர் விவேக். இயக்குநர் சிகரம் பாலச்சந்தரால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் விவேக்.
ஒரு சின்ன வீடியோவ பார்த்து… அதுக்கு நான் சரியா வருவேனு நம்புனரு… மிருணாளினி நெகிழ்ச்சி !
ரஜினி, விஜய், அஜித், கார்த்தி, தனுஷ், என டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார். இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் விவேக்.
கருத்தான நகைச்சுவை
தன்னுடைய கருத்து நிறைந்த நகைச்சுவைக் காட்சிகளுக்காக, சின்னக் கலைவாணர் என்றும் அழைக்கப்படுகிறார் நடிகர் விவேக். சினிமாவில் சமுதாய அக்கறை சார்ந்த நகைச்சுவை காட்சிகளுக்காக ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
சினிமாவில் பிஸி
திரைத்துறையில் அவருடைய சாதனையை பாராட்டி மத்திய அரசு, நடிகர் விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. மரம் நடும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். 59 வயதான நடிகர் விவேக் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தீவிர சிகிச்சை
இந்நிலையில் நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எக்மோ சிகிச்சை
அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக்கின் இதயம் மற்றும் நுரையீரல் இயக்கத்தை சீர் செய்யும் வகையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோர்வாய் இருந்த விவேக்
இந்நிலையில் காலையில் வீட்டில் இருந்தபோது நடிகர் விவேக்கிற்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்று தான் நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பதால் இன்று காலை உடல் சோர்வாய் இருந்துள்ளது.
உடற்பயிற்சி செய்யவில்லை
அதோடு சிறிது காய்ச்சலும் இருந்துள்ளது. இதனால் வழக்கமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் விவேக் இன்று உடற்பயிற்சி மேற்கொள்ளவில்லை என தெரிகிறது. மேலும் தான் இருக்கும் தெருவில் நடை பயிற்சி மேற்கொள்ளும் விவேக் இன்று நடை பயிற்சியும் மேற்கொள்ளவில்லை.
மருத்துவமனையில்
உடல் சோர்வுடன் இருந்த விவேக் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விவேக்கின் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ரசிகர்கள் பிரார்த்தனை
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நடிகர் விவேக்கிற்கு தொடர்ந்து எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விவேக் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.