twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திடீர் மாரடைப்பு.. சுய நினைவை இழந்த விவேக்.. எக்மோ சிகிச்சை.. இறுதியில் மரணம்.. நடந்தது என்ன?

    |

    சென்னை: நடிகர் விவேக்கின் திடீர் மரணம் தமிழ் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவரது மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    Recommended Video

    நடிகர் Vivek -ற்கு நடந்தது என்ன? Actor VIVEK passed away | SIMS Hospital

    நடிகர் விவேக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் கோலொச்சி வந்தார்.

    அந்த பளிச் சிரிப்பும், 'கஸ்' என்று உற்சாகமாக கூப்பிடுவதும் இனி இல்லை.. நடிகை கஸ்தூரி உருக்கம்! அந்த பளிச் சிரிப்பும், 'கஸ்' என்று உற்சாகமாக கூப்பிடுவதும் இனி இல்லை.. நடிகை கஸ்தூரி உருக்கம்!

    இயக்குநர் பாலச்சந்தர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட விவேக் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்து வந்தார்.

    அச்சப்படக்கூடாது

    அச்சப்படக்கூடாது

    இந்நிலையில் நேற்று முன்தினம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் விவேக். மக்கள் தடுப்பூசி போட அச்சப்படக்கூடாது என்று தைரியம் கூறினார் விவேக்.

    உடற்பயிற்சி செய்யவில்லை

    உடற்பயிற்சி செய்யவில்லை

    இதனை தொடர்ந்து உடல் சோர்வுடன் இருந்த நடிகர் விவேக், நேற்று காலை வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சியையும் மேற்கொள்ளவில்லை. பின்னர் காலை 11 மணியளவில் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார் விவேக்.

    சரிந்து விழுந்த விவேக்

    சரிந்து விழுந்த விவேக்

    அப்போது திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக் திடீரென மயங்கி சரிந்து விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ஆபத்தான நிலையில்..

    ஆபத்தான நிலையில்..

    அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், விவேக் இன்னும் ஆபத்தான கட்டத்தில் தான் இருக்கிறார் என்றனர்.

    இரத்தக்குழாயில் அடைப்பு

    இரத்தக்குழாயில் அடைப்பு

    மேலும் அவரின் உடல் நலக்குறைவுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினர். நடிகர் விவேக்கிற்கு ஏற்கனவே ரத்தக்கொதிப்பு இருந்தது என்றும் அவரது இதயத்தின் இடதுபுற ரத்தக்குழாயில் 100% அடைப்பு இருந்தது என்றும் கூறினர்.

     கார்டியோஜெனிக் ஷாக்

    கார்டியோஜெனிக் ஷாக்

    மேலும் நடிகர் விவேக்கிற்கு கார்டியோஜெனிக் ஷாக் எனும் இதய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் உடலுக்குத் தேவையான போதுமான இரத்தத்தை இதயத்தால் பம்ப் பண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கடுமையான மாரடைப்பை ஏற்படுத்தி விட்டது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    உயிர் பிரிந்தது

    உயிர் பிரிந்தது

    தொடர்ந்து விவேக்கின் உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஆனால் 24 மணி நேரத்திற்குள்ளேயே இன்று காலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்தது.

    நின்று போன துடிப்பு

    நின்று போன துடிப்பு

    விவேக்கின் இதயத்துடிப்பு மற்றும் நுரையீரல் செயல்பாட்டை தூண்டும் வகையில் தொடர்ந்து எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் விவேக்கின் இதயத்துடிப்பு முற்றிலும் குறைந்து இன்று காலை நின்று போனது. அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    இன்று மாலை தகனம்

    இன்று மாலை தகனம்

    சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரது உடலுக்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து இன்று மாலை இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் நடிகர் விவேக்கின் உடல் காவல்துறையின் முழு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

    English summary
    what happened to Actor Vivekh? from yesterday to today morning. Actor Vivekh is no more. Vivekh admitted in hospital yesterday due to cardiac arrest.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X