Ramya Divya Spandana: நடிகை ரம்யாவுக்கு மாரடைப்பா?.. தீயாய் பரவிய மரண வதந்தி.. என்ன ஆச்சு?
சென்னை: தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. 40 வயதாகும் நடிகை ரம்யா நேற்று இரவு வரை ட்விட்டரில் ஆக்டிவாக இருந்த நிலையில், திடீரென தற்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக வதந்தி ஒன்று தீயாக பரவி வருகிறது.
பல பிரபல மீடியாக்களே நடிகை ரம்யா மரணித்து விட்டதாக செய்திகளை வெளியிட்டு தற்போது டெலிட் செய்து வருகின்றனர். நடிகை ரம்யாவுக்கு எதுவும் ஆகவில்லை என்றும் வெளியான தகவல் பொய்யான செய்தி என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகாவை சேர்ந்த நடிகை ரம்யா எனும் திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியில் இணைந்து ரொம்பவே ஆக்டிவான அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகிறார். 1982ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பெங்களூருவில் பிறந்த இவர் 2003ம் ஆண்டு அபி எனும் கன்னட படத்தில் அறிமுகமானார்.
அதன்பின்னர் தெலுங்கில் அபிமன்யூ படத்தில் அதே ஆண்டு நடித்த ரம்யா தமிழில் சிம்பு நடித்த குத்து படத்தில் 2004ம் ஆண்டு நடித்து கோலிவுட்டிலும் அறிமுகமானார். கடைசியாக இந்த ஆண்டு வெளியான ஹாஸ்டல் ஹுட்குரு பெக்ககிதாரே படத்தில் கேமியோ ரோலில் நடித்த ரம்யா உத்தரகாண்டா எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், திடீரென இவர் குறித்து இப்படியொரு மரண வதந்தி பரவ என்ன காரணம் என்றே தெரியவில்லை என்கின்றனர். நடிகை ரம்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா? இந்த வதந்திக்கு அவரே விளக்கம் கொடுத்திருப்பாரே, அவருக்கு என்ன தான் ஆச்சு? என்கிற கேள்விகளையும் அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க எழுப்பி வருகின்றனர்.
ஜெனிவாவில் ஓய்வில் இருக்கும் ரம்யா: இந்நிலையில், நடிகை ரம்யா ஜெனிவாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும் இப்படியொரு வதந்தியை கிளப்பியவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா என விளாசி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











