விஜய்யின் பிரேஸ்லெட்க்கு என்னாச்சு...உண்மையை உடைத்த மாஸ்டர் டைரக்டர்

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். பொங்கல் ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீசில் மிகப் பெரிய அளவில் வசூலை அள்ளிக் குவித்தது. ரிலீசான 16 நாட்களில் ஒடிடி.,யில் வெளியிடப்பட்டும் தியேட்டர், ஓடிடி என இரண்டிலும் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படம் பற்றி இதுவரை வெளிவராத பல ரகசிய தகவல்களை வெளியிட்டார்.

அப்படி லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன் என பலரும் வெளியிட்ட விஜய் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி இருப்பதுடன், அவர்களின் ஆவர்வத்தை மேலும் தூண்டுவதாக அமைந்துள்ளன.

லோகேஷ் கனகராஜின் பழக்கம்

லோகேஷ் கனகராஜின் பழக்கம்

லோகேஷ் கனகராஜ் கூறுகையில், நான் எந்த படத்தில் பணியாற்றினாலும் அதன் நினைவாக அந்த செட்டில் இருந்து சிறு பொருள் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்வது எனது பழக்கம். அதே போல் மாஸ்டர் படத்தில் விஜய் அணிந்திருந்த பிரேஸ்லெட்டை அவரிடம் கேட்டேன்.

பிரேஸ்லெட்டை தர மறுத்த விஜய்

பிரேஸ்லெட்டை தர மறுத்த விஜய்

ஆனால் அதனை தர அவர் தயாராக இல்லை. கடைசியாக, அந்த பிரேஸ்லெட் தனக்கு சரியாக உள்ளதா இல்லையா என பார்த்து விட்டு தருவதாக விஜய்யிடம் இருந்து வாங்கினேன். ஆனால் கடைசியில் அவரிடம் அதை திருப்பிக் கொடுக்கவே இல்லை என்றார்.

நம்பிக்கை தந்த விஜய்

நம்பிக்கை தந்த விஜய்

விஜய் பற்றி லோகேஷ் கனகராஜ் கூறுகையில், தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முன்பே மாஸ்டர் படத்தின் காட்சிகள் லீக் ஆனதால் ரொம்ப அப்செட் ஆகிட்டேன். அப்போது விஜய் அண்ணா, ஃபிரியா விடு. நாம படத்தை முடிப்போம். தியேட்டரில் வந்து அவர்கள் நிச்சயம் பார்ப்பார்கள். மற்றதை விட்டு தள்ளு என நம்பிக்கை கொடுத்தார்.

கிரிக்கெட் விளையாடிய விஜய்

கிரிக்கெட் விளையாடிய விஜய்

அசிஸ்டென்ட் டைரக்டர்களுடன் மிக சாதாரணமாக தோளில் கை போட்டு பேசக் கூடியவர் விஜய். அவர்களின் பிறந்த நாளுக்கு கேக் ஆர்டர் செய்து பிறந்தநாள் கொண்டாட வைப்பார். படக்குழுவுடன் கிரிக்கெட் விளையாடுவார்.

இப்ப சார் இல்லை அண்ணா தான்

இப்ப சார் இல்லை அண்ணா தான்

ஆரம்பத்தில் நான் சார் என்று தான் கூப்பிட்டேன். பிறகு விஜய் அண்ணான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன். விஜய் சேதுபதியையும் சார்ன்னு தான் கூப்பிட்டேன். பிறகு அவரிடம், நான் உங்களை சேது அண்ணான்னு கூப்பிடலாமான்னு கேட்டேன். அவரும் ஓகே சொல்லிட்டார் என்றார் லோகேஷ் கனகராஜ்.

விக்ரமில் பிஸியான லோகேஷ்

விக்ரமில் பிஸியான லோகேஷ்

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள தளபதி 65 படத்தில் விஜய் நடித்து வருகிறார். அதே சமயம் கமல் நடிக்கும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X