பிக் பாஸ் வீட்டில் விக்ரமனுக்கு என்ன ஆச்சு.. கதறும் அமுதவாணன், ரச்சிதா.. ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் விக்ரமன் மயங்கிய நிலையில் விழுந்து கிடக்க அமுதவாணன், ரச்சிதா ஓடிப் போய் அழுது தூக்கும் காட்சிகள் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளன.

ஆனால், அது முற்றிலுமாக ஒரு சூப்பர் டிராமவில் இடம்பெற்ற காட்சிகள் என்பதை அறிந்ததும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் விக்ரமன், அமுதவாணன் மற்றும் ரச்சிதாவை பாராட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும் போது விக்ரமனும் ஒரு முழு நேர நடிகராக மாறி விடுவார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

விக்ரமனுக்கு என்னாச்சு

விக்ரமனுக்கு என்னாச்சு

விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் மயங்கி விழுந்து கிடப்பது போலவும், அவரை பார்த்து அமுதவாணன் மற்றும் ரச்சிதா அலறி அடித்து ஓடி வருவது போன்றும் ஸ்டில்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கின. ஆனால், உடனடியாக வீடியோக்களும் வெளியான நிலையில், அது வெறும் டிராமா என்பது தெரிய வந்துள்ளது.

திறமையோ திறமை

திறமையோ திறமை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிவி டாஸ்க் நடைபெற்று வருகிரது. ஒவ்வொரு போட்டியாளர்களும், ஆடுவது பாடுவது, செய்தி வாசிப்பது, ரேம்ப்வாக் செய்வது என தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், விக்ரமன், அமுதவாணன், ரச்சிதா மூவரும் இணைந்து போட்ட டிராமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கமல் சொன்ன மேட்டர்

கமல் சொன்ன மேட்டர்

கடந்த வாரம் பாதாள சாக்கடையில் இறங்குபவர்களின் நிலை குறித்து கமல் பேசிய நிலையில், அதையே கான்செப்ட்டாக எடுத்து இவர்கள் செய்து அசத்தி உள்ளனர். விக்ரமன் என்னை ஏன் டிராமால நடிக்க கூப்பிடுறீங்க என அமுதவாணன் கிட்ட சொன்ன நிலையில், ஸ்டேஜில் அப்படி நடிச்சி மனுஷன் அசத்தி விட்டார்.

பாதாள சாக்கடை

பாதாள சாக்கடை

வீட்டில் பிசைந்து வைத்த சாப்பாட்டை எல்லாம் முகத்தில் பூசிக் கொண்டு பாதாள சாக்கடையை சுத்தம் பண்ணும் துப்புரவு தொழிலாளியாக விக்ரமன் செம பர்ஃபார்மன்ஸ் கொடுக்க, எங்க அப்பாவுக்கு என்ன ஆச்சு என அங்கே வேடிக்கை பார்க்கும் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களாக நிற்கும் சக போட்டியாளர்களை பார்த்து அமுதவாணன் கேட்கும் கேள்விகள் எல்லாம் ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளன.

அமுதவாணன், ரச்சிதா

அமுதவாணன், ரச்சிதா

விக்ரமன் மயங்கி விழுந்து இறந்து போக அவரது மகனாக வரும் அமுதவாணன் மற்றும் மனைவியாக அடித்துக் கொண்டு அழும் கதாபாத்திரத்தில் ரச்சிதா என இருவருமே நடிப்பில் வெறித்தனம் காட்டி உள்ளனர். இவர்கள் மூவரின் இந்த டிராமா பிக் பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கண்டிப்பாக இதற்காக கமலிடம் ஸ்பெஷல் பாராட்டுக்கள் கிடைக்கும் என்பது உண்மை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X