வாழ்க்கையை திருப்பிப்போட்ட அந்த 3 மாதங்கள்... ஆனந்த கண்ணனுக்கு என்ன நடந்தது? வெளியான பகீர் தகவல்!

சென்னை: ஆனந்த கண்ணனுக்கு என்ன நடந்தது என்பது குறித்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

சன் மியூஸிக் சேனல் தொடங்கப்பட்ட காலத்தில் அதில் பிரபல ஆர்ஜேவாக பணியாற்றியவர் விஜே ஆனந்த கண்ணன்.

இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாத குழந்தை கிளாடி சாராவின் உயிர் காக்க உதவுங்கள்

90ஸ் கிட் மற்றும் 2000 ஆம் கிட்ஸ்களின் ஃபேவரைட் விஜேவாக இருந்தார்.

சிங்கப்பூர் தமிழர்

சிங்கப்பூர் தமிழர்

சிங்கப்பூர் தமிழரான ஆனந்த கண்ணன், எப்போதும் சிரித்த முகத்துடனும் நகைச்சுவையாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதனாலேயே பெரும் ரசிகர் பட்டபாளத்தை கொண்டிருந்தார் ஆனந்த கண்ணன்.

விஜே.. நடிகர்.. ஆர்ஜே..

விஜே.. நடிகர்.. ஆர்ஜே..

அதிலும் குறிப்பாக ஆனந்த கண்ணனுக்கு பெண் ரசிகைகள் ஏராளம். தமிழ் தொலைக்காட்சியின் முன்னணி சேனல்களில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த ஆனந்த கண்ணன், ரேடியோக்களில் ஆர்ஜேவாகவும் பணியாற்றினார் , சிந்து பாத், விக்ரமாதித்தன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

புற்று நோய்.. பித்தப்பை அகற்றம்

புற்று நோய்.. பித்தப்பை அகற்றம்

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆனந்த கண்ணன். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பித்தப்பையில் புற்றுநோய் ஏற்பட்டிருந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பித்தப்பையை அகற்றியுள்ளனர் மருத்துவர்கள்.

கல்லீரலிலும் பரவிய புற்று நோய்

கல்லீரலிலும் பரவிய புற்று நோய்

பின்னர் வீட்டில் இருந்தப் படியே தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டுள்ளார் ஆனந்த கண்ணன். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே உடல் நிலை மீண்டும் மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் ஆனந்த கண்ணன். அப்போது அவரது கல்லீரலும் புற்று நோய் பரவியதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர் மருத்துவர்கள்.

இடியை இறக்கிய மருத்துவர்கள்

இடியை இறக்கிய மருத்துவர்கள்

அதோடு கல்லீரல் புற்று நோய் நான்காம் நிலையில் இருப்பதாகவும் இடியை இறக்கியுள்ளனர் மருத்துவர்கள். இருப்பினும் பெரும் பிரபலமான ஆனந்த கண்ணன் சிங்கப்பூரில் உள்ள முன்னணி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சென்னையில் உள்ள சிறப்பு மருத்துவர்களுக்கும் தனது ரிப்போர்ட்டை அனுப்பி ஆலோசனை பெற்று வந்துள்ளார்.

சோர்ந்து போன ஆனந்த கண்ணன்

சோர்ந்து போன ஆனந்த கண்ணன்

இருப்பினும் அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்துள்ளது. இதனால் ரொம்பவே சோர்ந்து போயுள்ளார் ஆனந்த கண்ணன். அதுவரை அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்து வந்த புற்று நோய் பாதிப்பு குறித்த தகவல், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் உறவினர்களுக்கும் சினிமா மற்றும் சின்னத்திரை நண்பர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் இரவு..

நேற்று முன் தினம் இரவு..

அவர்கள் தொலைபேசி வாயிலாகவும், நேரில் சந்தித்தும் ஆனந்த கண்ணனை உற்சாகப்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மீண்டும் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மூன்றே மாதங்களில் முடிந்து போன வாழ்க்கை

மூன்றே மாதங்களில் முடிந்து போன வாழ்க்கை

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஆனந்த கண்ணனின் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனந்த கண்ணனின் திடீர் மறைவால் அவரது குடும்பமே கண்ணீரில் மூழ்கியுள்ளது. அடுத்து என்ன என தெரியாமல் திணறிபோயுள்ளனர். மூன்றே மாதங்களில் ஆனந்த கண்ணனின் வாழ்க்கையை திருப்பிப்போட்டு கடைசயில் அவரின் உயிரையும் குடித்துவிட்டது புற்றுநோய்.

தமிழ் சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி

ஆனந்த கண்ணனின் மறைவு தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். இதே போல் ரசிகர்களும் அவரது மரணத்தை நம்பவே முடியவில்லை என தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X