என்னங்கண்ணா, நீங்களே வார்த்தை தவறினால் எப்படிங்கண்ணா? #Sarkar
Recommended Video

சென்னை: சர்கார் பட போஸ்டரை பார்ப்பவர்கள் சமூக வலைதளங்களில் விஜய்யிடம் இப்படி தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சர்கார் பட போஸ்டரை பார்த்த மக்களுக்கு விஜய் புகைப்பிடிப்பது போன்று போஸ் கொடுத்தது அதிர்ச்சியை அளித்தது. காரணம் இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று விஜய் அளித்த வாக்குறுதி தான்.
தெறி படத்தில் கூட மகேந்திரன் புகைப்பிடிப்பதை பார்த்து சிகரெட்டை பறித்துவிட்டு இது உடல் நலத்திற்கு கேடு என்பார் விஜய்.

படம்
வாக்குறுதி அளித்ததுடன், அடுத்தவர்கள் புகைப்பிடிப்பதை கண்டித்த விஜய்யா புகைப்பிடிப்பது போன்று போஸ் கொடுத்திருக்கிறார் என்றே விமர்சனம் எழுந்துள்ளது.

வேண்டுகோள்
2007ம் ஆண்டு சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் புகைப்பிடிப்பதற்கு எதிராக பேசினார். மேலும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை விஜய் நிறுத்த வேண்டும் என்றார்.
விஜய்
விஜய்யும் அன்புமணி ராமதாஸின் கோரிக்கையை ஏற்று இனிமேல் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று பேட்டி அளித்தார். ஆனால் கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றத் தவறிவிட்டார். இதை அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சர்கார்
முன்னதாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்த துப்பாக்கி படத்திலும் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்திருந்தார். சர்கார் படமும் முருகதாஸ் இயக்கம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கலாய்
விஜய் அன்புமணி ராமதாஸுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறியது குறித்து இந்த வீடியோ.


Click it and Unblock the Notifications











