யாருடன் ஆடினாய்.. செத்துத் தொலை.. சித்ராவின் உயிரை குடித்த ஹேமந்தின் வார்த்தைகள்.. பகீர் தகவல்!
சென்னை: சித்ராவிடம் சண்டையிட்ட போது தான் பேசிய வார்த்தைகளை போலீசாரின் விசாரணையில் கூறியுள்ளார் ஹேம்நாத்.
Recommended Video

பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த 9ஆம் தேதி சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது கணவரான ஹேம்நாத் உடன் இருந்தபோதே அவரை வெளியே அனுப்பிவிட்டு சித்ரா ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

6 நாட்கள் விசாரணை
சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவரது முகத்தில் இருந்த காயங்கள் அவரது மரணம் தற்கொலைதானா என்ற சந்தேகத்தை எழுப்பியது. இதனை தொடர்ந்து சித்ராவுடன் அறையில் தங்கியிருந்த அவரது கணவரிடம் போலீசார் தொடர்ந்து 6 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர்.

சண்டை போடவில்லை
நேற்று சித்ராவின் தாயாரிடம் நசரத் பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் தன்னுடைய மகளிடம் சண்டை போடவில்லை என்றும் எந்த தாயும் தன்னுடைய மகளின் மரணத்திற்கு காரணமாக இருக்க மாட்டார் என்றும் கூறினார்.

கைது சிறையிலடைப்பு
மேலும் தன்னுடன் சித்ரா போனில் பேசியது என்ன என்பது குறித்தும் கூறினார் சித்ராவின் தாயாரான விஜயா. இந்நிலையில் 6 நாட்கள் விசாரணைக்கு பிறகு நேற்றிரவு சித்ராவின் கணவரான ஹேம்நாத் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முதலில் ஒரு பதில்
சித்ராவை தற்கொலை தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் முதலில் குளிக்கப்போகிறேன் வெளியே போங்கள் என்று கூறிய சித்ரா தான் வெளியே இருந்த நேரத்தில் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார் ஹேம்நாத்.

ஹேண்ட் பேக்கை மறந்து
அதன்பிறகு, சித்ரா தனது ஹேண்ட்பேக்கை காரில் மறந்து வைத்துவிட்டதாகவும் அதை எடுத்து வருமாறு கூறினார். எடுத்து வர சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார் ஹேம்நாத்.

ஒப்புக்கொண்ட ஹேம்நாத்
ஹேம்நாத்தின் இந்த முன்னுக்கு பின் முரணான பதில்கள் சந்தேகத்தை வலுப்பெற செய்ய, விசாரணையை இறுக்கினர் போலீசார். இதில் புதன் கிழமை அதிகாலை சித்ரா ஷுட்டிங் முடிந்து வந்ததும் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டை போட்டதை ஒப்புக்கொண்டுள்ளார் ஹேம்நாத்.

இன்று எந்த நடிகருடன்?
அவர் போலீஸில் அளித்த தகவலின்படி, அறைக்கு வந்த சித்ராவிடம் இன்று எந்த நடிகருடன் ஆடினாய் என்று கேட்டும் வார்த்தைகளை விஷமாக கக்கியுள்ளார். இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில் சக நடிகர்களுடன் ஒப்பிட்டு கடுமையாக பேசியுள்ளார் ஹேம்நாத்.

செத்துத் தொலை..
இறுதியாக செத்துத் தொலை என்றும் கூறிவிட்டு அறையைவிட்டு கோபத்தில் வெளியேறியுள்ளார் ஹேம்நாத். ஹேம்நாத்தை பைத்தியக்காரத்தனமாக காதலித்த சித்ரா, அவரது கொடூர வார்த்தைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை முடிவை கையில் எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











