நெல்சனிடம் நான் கற்றுக்கொண்டது.. அனுபவத்தை பகிரும் அருண்ராஜா காமராஜ்!

சென்னை: நடிகர்,பாடகர், பாடலாசிரியர்,இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்

இப்பொழுது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை இயக்கியுள்ள அருண்ராஜா காமராஜ் நெல்சன் இடம் இருந்து தான் கற்றுக் கொண்டதை பகிர்ந்துள்ளார்.

கபாலியில் பாடல் பாடி

கபாலியில் பாடல் பாடி

நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் இயக்குனருமான அருண்ராஜா காமராஜ் பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களை கொண்டுள்ளார் . குறிப்பாக தெறி,கபாலி உள்ளிட்ட படத்தில் இவர் பாடிய பாடல்கள் வேற லெவல் ஹிட்டடித்தது. இவ்வாறு பல பரிமாணங்களை கொண்டுள்ள அருண்ராஜா காமராஜ் கனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்து இருக்க ஐஸ்வர்யா ராஜேஷின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு மாபெரும் வெற்றியை தேடித் தந்தது

கனா

கனா

கனா தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் கனா திரைப்படம் சீன மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பதித்த அருண்ராஜா காமராஜின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஆர்ட்டிகள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார்.

நெல்சனிடம் உதவி இயக்குனராக

நெல்சனிடம் உதவி இயக்குனராக

தமிழில் இந்த படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். சாதி ரீதியான பாகுபாடுகளை மையப்படுத்தி இன்றளவும் நாட்டில் உள்ள தீண்டாமை குறித்து இப்படம் மிக அழுத்தமாக பேச உள்ளது. நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து அடுத்ததாக அருண்ராஜா காமராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் நெல்சனிடம் வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

நெல்சனிடம் நான் கற்றுக்கொண்டது

நெல்சனிடம் நான் கற்றுக்கொண்டது

வேட்டை மன்னன் பாதியிலேயே நிறுத்தப்பட்டு டிராப் ஆனதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த அருண்ராஜா காமராஜ் ஒருநாள் நெல்சன் இடம் எனக்கு பாடல் எழுத வருகிறது நடிப்பிலும் ஆர்வமாக இருக்கிறது எனவே நான் அதையும் செய்யலாமா எனக் கேட்டதற்கு, நெல்சன் நிச்சயமாக செய், எது உனக்கு நன்றாக தெரியுமோ அது எதுவாக இருந்தாலும் முழுமனதோடு செய்... ஆனால் எந்த வேலை செய்தாலும் அதை சினிமாவிலேயே செய் என அருண்ராஜா காமராஜுக்கு நெல்சன் அட்வைஸ் வழங்கியுள்ளார். அதன்படி பீட்சா,தெறி,கபாலி உள்ளிட்ட பல படங்களுக்கு அருண்ராஜா காமராஜ் பாடல்கள் எழுதினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X