ஏன் தோனி நல்லா இருப்பது விக்னேஷ் சிவனுக்கு பிடிக்கவில்லையோ?
Recommended Video

சென்னை: ஒரு ட்வீட் போட்ட விக்னேஷ் சிவனை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
கோலமாவு கோகிலா படத்தில் வரும் கல்யாண வயசு பாடல் ஹிட்டாகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். காதலி நயன்தாராவுக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சி அடைய வேண்டியது தானே.
இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற சி.எஸ்.கே. அணியின் கேப்டன் தோனி பற்றி ட்வீட்டியுள்ளார் விக்னேஷ்.
விக்னேஷ் சிவன்
தோனி இந்திய பிரதமர் ஆனால் எப்படி இருக்கும். என்ன ஒரு தலைவர். அவர் ஸ்போர்ட்ஸோடு நிறுத்தாமல் நாட்டிற்காக நல்லது செய்ய வேண்டும் என்று ட்வீட்டியுள்ளார் விக்னேஷ் சிவன்.

போதை
என்ன விக்னேஷ் சிவன் மப்பு ஏறிவிட்டதா. தோனியை அரசியலில் கோர்த்துவிடப் பார்க்கிறீர்கள். பேசாமல் போய் படுத்து தூங்குங்க என்று நெட்டிசன்கள் கமெண்ட் போட்டுள்ளனர்.

படம்
அட சும்மா இருங்கய்யா.. நீங்க ஏத்தி விட்டுட்டு ஷூட்டிங்கிற்கு போயிடுவீங்க என்கிறார்கள் நெட்டிசன்கள்.
பிடிக்கலையா?
அப்படிப் பார்த்தால் சச்சின் டெண்டுல்கர் அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருக்க வேண்டும். ஏன் தோனி நல்லா இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா என்று கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











