twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதே நான் கன்னடத்தில் போட்டா உங்க நிலைமை என்ன ஆகும்.. அஜய் தேவ்கனுக்கு பதிலடி கொடுத்த கிச்சா சுதீப்!

    |

    மும்பை: சினிமா விழாவில் பேசிய நடிகர் கிச்சா சுதீப் இனிமேலும், இந்தி மொழியை தேசிய மொழியென யாரும் சொல்ல வேண்டாம் எனக் கூறியது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை ரொம்பவே ஆத்திரமடைய செய்தது.

    உங்கள் தாய் மொழி படங்களை பிறகு ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுறீங்க என சற்றும் யோசிக்காமல் அஜய் தேவ்கன் கிச்சா சுதீப்புக்கு போட்ட ட்வீட் தீயை பற்ற வைத்தது.

    நடிகர் அஜய் தேவ்கனுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏகப்பட்ட எதிர்ப்பு கமெண்ட்டுகள் குவியத் தொடங்கி உள்ளன. இந்நிலையில், கிச்சா சுதீப் போட்ட பதில் ட்வீட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    என்னது...கேஜிஎஃப் 2, சூர்யா படத்தோட காப்பியா....இது என்னடா கேஜிஎஃப்.,க்கு வந்த சோதனை? என்னது...கேஜிஎஃப் 2, சூர்யா படத்தோட காப்பியா....இது என்னடா கேஜிஎஃப்.,க்கு வந்த சோதனை?

    இந்தி தேசிய மொழி இல்லை

    இந்தி தேசிய மொழி இல்லை

    'R: The Deadliest Gangster Ever' எனும் கன்னட பட விழாவில் கலந்து கொண்டு பேசிய விக்ராந்த் ரோணா பட நடிகர் கிச்சா சுதீப், இனியும் இந்தி தேசிய மொழி கிடையாது எனக் கூறியுள்ளார். மேலும், பாலிவுட் படங்கள் தற்போது பான் இந்தியா படங்களை எடுக்கும் முயற்சியில் இறங்கி விட்டன என்று பேசினார்.

    அஜய் தேவ்கன் ஆத்திரம்

    அஜய் தேவ்கன் ஆத்திரம்

    உங்களை பொறுத்தவரையில் இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய் மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என கிச்சா சுதீப்பை டேக் செய்து கேட்டுள்ளார் நடிகர் அஜய் தேவ்கன் மேலும், எப்போதும் இந்தி தான் நம் அனைவரின் தாய் மொழி என்றும் அது தான் தேசிய மொழி என்றும் ட்வீட் செய்ய ஏகப்பட்ட ரசிகர்கள் அஜய் தேவ்கனுக்கு எதிராக களமிறங்கி இந்தி தேசிய மொழியே கிடையாது. பொறுப்புடன் பேசுங்க அக்‌ஷய் குமார் என திட்ட ஆரம்பித்து விட்டனர்.

    கிச்சா சுதீப் பதில்

    கிச்சா சுதீப் பதில்

    அஜய் தேவ்கன் இப்படியொரு ட்வீட் போட்டதும் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க நினைத்த கிச்சா சுதீப் நான் அந்த இடத்தில் சொல்ல வந்த விஷயமே வேறு சார், உங்கள் காதுகளுக்கு அது தவறாக வந்து சேர்ந்திருக்கலாம். நான் ஏன் அப்படி சொன்னேன் என்பதை தனியாக உங்களை நேரில் சந்திக்கும் போது சொல்கிறேன். தேவையற்ற விவாதத்தை உங்களுடன் கிளப்ப எனக்கு என்ன சார் இருக்கு எனக் கேட்டுள்ளார்.

    எல்லா மொழியும் பிடிக்கும்

    எல்லா மொழியும் பிடிக்கும்

    எனக்கு அனைத்து மொழி மீதும் அன்பும் மதிப்பும் இருக்கு சார். இந்த பிரச்சனையை இத்துடன் முடித்து வைக்க நினைக்கிறேன். அந்த நிகழ்ச்சியில் நான் பேசியதே வேற விஷயம் சார், உங்கள் மீது பெரிய அன்பும் மரியாதையும் இருக்கு, விரைவில் உங்களை சந்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

    தரமான பதிலடி

    தரமான பதிலடி

    மற்றொரு ட்வீட்டில் இந்தியில் நீங்க போட்ட ட்வீட்டை புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அளவுக்கு அந்த மொழி வளர்ந்திருக்கிறது என்பது உண்மை தான். இதே ட்வீட்டை நான் கன்னட மொழியில் போட்டால் நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள் என்பது தான் எனக்கு வியப்பாக இருக்கு சார்.. நாம் அனைவருமே இந்தியர்கள் தான் என தரமான பதிலடியை கொடுத்து அஜய் தேவ்கனுக்கு புரிய வைத்துள்ளார்.

    அமைதியான அஜய் தேவ்கன்

    அமைதியான அஜய் தேவ்கன்

    நண்பா கிச்சா சுதீப் எனக்கு புரிய வைத்ததற்கு நன்றி. நான் எப்போதுமே சினிமா துறை ஒன்று தான் என நினைப்பவன். நாம் அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும். அதே சமயம் எங்கள் மொழியையும் மற்றவர்கள் மதிக்க வேண்டும் என நினைக்கிறேன். மொழிபெயர்ப்பு பிரச்சனையால் இந்த தவறு நடந்திருக்கலாம் என பெரிய கும்பிடு போட்டு அமைதியாகி விட்டார் அஜய் தேவ்கன்.

    English summary
    Kiccha Sudeep swag reply to Ajay Devgn, “I did understand the txt you sent in hindi. Tats only coz we all have respected,loved and learnt hindi. No offense sir,,,but was wondering what'd the situation be if my response was typed in kannada.!! Don't we too belong to India sir.”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X