twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது...நினைவெல்லாம் நீயடா இளையராஜாவின் 1471 வது படமா? குழப்பத்தில் ரசிகர்கள்

    |

    சென்னை : தேனி மாவட்டம் பண்ணபுரத்தில் ஞானதேசிகன் என்ற பெயரில் பிறந்து, வளர்ந்தவர் இளையராஜா. பள்ளியில் சேர்ப்பதற்காக அவரின் தந்தை, ராஜைய்யா என பெயர் மாற்றம் செய்தார். இசை மீதான ஆர்வத்தால் சினிமாவில் இசை அமைக்கும் வாய்ப்பை பெற்றார் இளையராஜா.

    திடீரென மாற்றப்பட்ட நடிகை... அப்பா வயது நடிகருக்கு ஜோடியாகும் இலியானா... ஹாட் தகவல்! திடீரென மாற்றப்பட்ட நடிகை... அப்பா வயது நடிகருக்கு ஜோடியாகும் இலியானா... ஹாட் தகவல்!

    1970 களில் அன்னக்கிளி படத்தின் மூலம் இசை பயணத்தை தொடங்கினார். இந்த படத்திற்காக இளைய என்ற பட்டத்தை, ராஜைய்யா என்ற பெயருடன் இணைத்தார் பஞ்சு அருணாச்சலம். அதன் பின்னர் இளையராஜா என்ற பெயருடனேயே அடுத்து வரும் படங்களில் அறிமுகம் செய்யப்பட்டார். பின்னர் இசைஞானி என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.

    7000 பாடல்கள்

    7000 பாடல்கள்

    இளையராஜா இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் 7000 க்கும் அதிகமான பாடல்களை இசையமைத்துள்ளார். 3 முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை இளையராஜா பெற்றுள்ளார். 20,000 க்கும் அதிகமான மேடை கச்சேரிகளை நடத்தி உள்ளார். இந்த தகவல்கள் அனைவரும் அறிந்தது தான்.

    என்னது 1417 வது படமா

    என்னது 1417 வது படமா

    தற்போது இளையராஜா பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் படங்களில் இசையமைக்க அவரிடம் பேசப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகும் நினைவெல்லாம் நீயடா. இந்த படம் பற்றிய அறிவிப்பில், இந்த படம் இளையராஜாவின் 1417 வது படம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இசைஞானியின் ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.

    தாரை தப்பட்டை 1000 வது படம்

    தாரை தப்பட்டை 1000 வது படம்

    ஏற்கனவே பாலா இயக்கிய தாரை தப்பட்டை படம் இளையராஜாவின் 1000 வது படம் என கூறி விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த படம் 2016 ம் ஆண்டு ரிலீசானது. இந்த படத்திற்காக இளையராஜாவிற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகளுக்குள் இளையராஜா 416 படங்களுக்கு இசையமைத்து விட்டாரா என ரசிகர்கள் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    சந்தேகம் எழுப்பும் ரசிகர்கள்

    சந்தேகம் எழுப்பும் ரசிகர்கள்

    அதே சமயம் இளையராஜா, மெல்ல திறந்தது கதவு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் உடன் இணைந்து இசையமைத்ததை போல் மற்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அப்படி பார்த்தால் 1417 வது படம் என்பது சரியாக இருக்கலாம் என சிலர் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சிலர் தவறாக இந்த எண்ணிக்கையை படக்குழுவினர் வெளியிட்டிருக்கலாம் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

    படக்குழு விளக்கம் அளிக்குமா

    படக்குழு விளக்கம் அளிக்குமா

    ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் இளையராஜா எப்படி 416 படங்களுக்கு இசையமைத்திருப்பார் என்பது தான் அதிகமான ரசிகர்களின் சந்தேகமாக உள்ளது. இதற்கு நினைவெல்லாம் நீயடா படக்குழுவினர் விளக்கம் அளிப்பார்களா என்பது தான் தெரியவில்லை.

    English summary
    Ninaivellam neyada movie team announced that this movie was ilayaraja's 1417 th film. but earlier said that tharai thapattai movie is ilayaraja's 1000 th movie. fans doubt about is this true, how ilayaraja compose 416 movies in 4 years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X