பிக் பாஸ் போட்டியாளர்கள் ஓவியா, ஆரவ், ஜூலி, காயத்ரியின் தற்போதைய நிலை தெரியுமா?

By Siva

Recommended Video

பிக் பாஸ் போட்டியாளர்கள் ஓவியா முதல் ஜூலி வரை தற்போதய நிலைமை - வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் வரும் 17ம் தேதி துவங்குகிறது. முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார். முதல் சீசனில் கலந்து கொண்டவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

2வது சீசன் துவங்கும் முன்பு முதல் சீசன் போட்டியாளர்களின் தற்போதைய நிலை பற்றி பார்ப்போம்.

படங்கள்

படங்கள்

அனைவருக்கும் பிடித்த ஓவியாவை தேடி பட வாய்ப்புகள் வருகிறது. ஆனால் அவர் அனைத்து வாய்ப்புகளையும் ஒப்புக் கொள்வது இல்லை. அவர் கையில் முனி 4, களவாணி 2, 90 எம்எல் ஆகிய படங்கள் உள்ளன.

படம்

படம்

ஓவியாவுடன் நெருங்கிப் பழகிவிட்டு அவரை காதலிக்கவில்லை என்று கூறி ஓவியா ஆர்மியின் கோபத்திற்கு ஆளான ஆரவ் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சமீர் பரத் ராமின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

செல்லக்குட்டி

செல்லக்குட்டி

ரசிகர்களால் செல்லக்குட்டி என்று அழைக்கப்படும் ஹரிஷ் கல்யாண் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் போட்டியாளர் ரைசா வில்சன் நடித்துள்ளார்.

ரைசா வில்சன்

ரைசா வில்சன்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மாடல் அழகியான ரைசா வில்சன் ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்துள்ளார். அவரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

படங்கள்

படங்கள்

ஒயில்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிந்து மாதவி நடித்த பக்கா படம் ரிலீஸானது. கரு.பழனியப்பன் இயக்கி வரும் புகழேந்தி எனும் நான் படத்தில் நடித்துள்ளார் பிந்து மாதவி. மேலும் புதுப்படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.

மும்பை

மும்பை

பெரிய எதிர்பார்ப்புடன் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த அனுயாவின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மும்பையில் இருக்கும் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வர ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஓட்டம்

ஓட்டம்

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் கார்னர் செய்ததால் எஸ்கேப் ஆகப் பார்த்த பரணி தற்போது கன்னக்கோல் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

வணங்காமுடி

வணங்காமுடி

பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யாத ஒரே ஆள் கணேஷ் வெங்கட்ராமன். அவர் கையில் தற்போது மூன்று படங்கள் உள்ளன. நேரம் கிடைக்கும்போது எல்லாம் மனைவியை அழைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு சென்றுவிடுகிறார்.

சிவாஜி தேவ்

சிவாஜி தேவ்

ஒயில்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த சுஜா வருணி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் அண்மையில் ரிலீஸானது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனை சுஜா விரைவில் திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சக்தி

சக்தி

ட்ரிக்கர் சக்தி என்று அழைக்கப்பட்ட சக்தி புதுப்படங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அவர் மிஸ்ஸஸ் சின்னத்திரை டிவி நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக உள்ளார்.

படம்

படம்

கவிஞர் சினேகன் கமல் ஹாஸனின் கட்சியில் சேர்ந்துவிட்டார். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார். மேலும் ஓவியாவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார்.

பக்கா

பக்கா

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரி நடித்த பக்கா, கலகலப்பு 2 படங்கள் ரிலீஸாகின. தற்போது அவர் ஜெயிக்கிற குதிர படத்தில் நடித்து வருகிறார்.

இல்லை

இல்லை

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வேகத்தில் வெளியே சென்றவர் மாநகரம் புகழ் ஸ்ரீ. அவர் புதுப்படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை. இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார்.

கலகலப்பு 2

கலகலப்பு 2

பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட இரண்டு வாரம் இருந்தவர் காஜல். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அவர் நடித்த கலகலப்பு 2 படம் ரிலீஸாகி ஹிட்டானது.

நிமிர்

நிமிர்

பரணியிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்த கஞ்சா கருப்பு நிமிர் படத்தில் நடித்தார். மேலும் பரணியுடன் சேர்ந்து கன்னக்கோல் படத்தில் நடித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

பிக் பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு எதிராக நமீதா செய்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் தனது காதலரான வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். டி. ராஜேந்தர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் நமீதா.

டிவி

டிவி

கட் அன்ட் ரைட்டாக பேசியதால் ஆர்த்தியை பலருக்கு பிடிக்காமல் போனது. ஆர்த்திக்கும், ஜூலிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. ஆர்த்தி தற்போது டிவி நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார்.

படங்கள்

படங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களில் பெரும்பாலானவர்களிடம் திட்டு வாங்கியவர் ஜூலி. அவர் தற்போது கோலிவுட்டில் ஹீரோயினாகிவிட்டார். அரசியலுக்கு வருவதாக வேறு அறிவிப்பு வெளியிட்டார்.

குடும்பம்

குடும்பம்

காயத்ரி ரகுராமை ரசிகர்கள் பலருக்கு பிடிக்கவில்லை. தற்போது கூட அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் அதை எல்லாம் கண்டுகொள்வது இல்லை. படங்கள், குடும்பம், கட்சி என்று தன்னை பிசியாக வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X