வாங்குன ஓட்டு எல்லாம் வேஸ்ட்டா போச்சே.. பிக்பாஸ் ஆரிக்கு என்னாச்சு? எங்கே போனார் தெரியுமா?
சென்னை: பிக்பாஸ் தொடரில் 4வது சீசனில் வெற்றிபெற்ற நடிகர் ஆரி வெளியே எங்கேயும் வராமல் இருப்பதால் ரசிகர்கள் பலரும் அவரை அப்படியே மறந்துவிட்டனர்.
பிக்பாஸ் தொடரில் கடந்த சீசனில் நடிகர் அசீம் வெற்றிபெற்றார். அந்த சீசனில் அவருக்கு கடும் போட்டியாக இருந்தவர் நடிகர் விக்ரமன்.
விக்ரமன் பேச்சுக்கள், செயல்பாடுகள் பலவும் சீசன் 4ல் வந்த நடிகர் ஆரியை பலருக்கும் நினைவு படுத்தியது. ஆரி போலவே இருக்கிறாரே என்று பலரும் கூறி இருந்தனர்.

பிரபலம்
அந்த அளவிற்கு ஆரி பிக்பாஸ் உலகில் பெரிய தலைக்கட்டு. பிக்பாஸ் 4ல் வந்த போட்டியாளர்கள் எல்லோரிடமும் கண்டிப்பாக இருந்தாலும் வெளியே இவருக்கு பெரிய நல்ல பெயர் இருந்தது. பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் கூட இவரை பார்த்த போது நன்றாக ஆடுகிறீர்கள் தம்பி என்று பாராட்டும் அளவிற்கு இவரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அந்த சீசனில் இவருக்கு கடைசி வரை பிரச்சனை இருந்தது. முக்கியமாக சக போட்டியாளர்களின் ஆதரவு எதுவும் இன்றி பெரும்பாலும் அவர் தனியாகவே இருக்கும் நிலை இருந்தது.

ஆரி
இந்த நிலையில்தான் மக்களின் பெரிய ஆதரவோடு அந்த சீசனில் ஆரி வெற்றியும் பெற்றார். அவர் வெற்றிபெற்ற பின் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு முன் அவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார். அதில் நெடுஞ்சாலை மட்டுமே அவருக்கு ஹிட் கொடுத்த படம் ஆகும். ஆனால் இந்த பிக்பாஸ் மூலம் அவருக்கு மக்கள் இடையே பெரிய வரவேற்பு இருந்தது. மக்கள் மத்தியில் அவர் முகமும் நன்றாக பதிந்து இருந்தது. இதனால் அவர் பெரிய ரவுண்டு வரப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மோசம்
ஆனால் வெளியே வந்த ஆரி படங்களில் நடிக்க நிறைய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார். கதையில் நிறைய மாற்றங்களை சொல்லி இருக்கிறார். இப்படித்தான் காட்சிகள் இருக்க வேண்டும், இப்படித்தான் வசனம் இருக்க வேண்டும், கதையில் இதை எல்லாம் மாற்றுங்கள் என்றெல்லாம் நிறைய அறிவுரைகளை சொல்லி இருக்கிறாராம். எந்த கதையும் அவர் மாற்றம் சொல்லாமல் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரை இயக்குனர்கள் அணுகுவதை அப்படியே குறைத்துக்கொண்டு உள்ளனர்.

கதைகள்
வந்த கதைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளன. அவருக்கு இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் கதையே இல்லை என்ற நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போதுதான் ஒரு படத்தில் அவர் கமிட் ஆகி இருக்கிறாராம். இளம் இயக்குனர் ஒருவரின் படத்தில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறாராம். அதை தவிர அவரிடம் வேறு படம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. பிக்பாஸ் சீசனில் வெற்றிபெற்ற ஓவியா அதன்பின் அப்படியே காணாமல் போய்விட்டார். ரித்விகா பெரிதாக படங்களில் நடிப்பது இல்லை. ராஜுவும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தவிர பெரிதாக எதுவும் செய்வது இல்லை, அஸீமும் கெட்ட பெயர் எடுத்துவிட்டார்.. மொத்தத்தில் பிக்பாஸ் என்னும் சுவர் பலரை காலி செய்துவிட்டது.. இன்னும் எத்தனை பேரை அந்த சுவர் காலி செய்ய போகிறதோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











