ரஜினிட்ட புடிச்சதே அந்த விஷயம்தான்... தாறுமாறாக வியக்கும் தர்பார் வில்லன்

By

சென்னை: உடன் நடிப்பவர்களை ஊக்கப்படுத்துவது ரஜினிகாந்திடம் பிடித்த விஷயம் என்று பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி சொன்னார்.

பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். அவர் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார்.

போலீஸ் அதிகாரி

போலீஸ் அதிகாரி

இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். தாதாக்களுக்கும் போலீசுக்கும் நடக்கும் மோதலை மையமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பகுதி படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது.

டிரெண்டான டிரைலர்

டிரெண்டான டிரைலர்

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.'ஒரிஜினலாகவே நான் வில்லன்மா' என்று ரஜினி பேசும் வசனம் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. இந்த டிரைலர் வெளியான சில நிமிடங்களிலே டிரெண்ட் ஆனது.

சுனில் ஷெட்டி

சுனில் ஷெட்டி

இந்தப் படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ள சுனில் ஷெட்டி, ஏற்கனவே தமிழில் 12பி படத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் நடித்தது பற்றி கூறும்போது, 'இயக்குனர் முருகதாஸ் என்னிடம் கேட்டதுமே, நடிக்கிறேன் என்று உடனடியாக ஓகே சொன்னேன் என்றார்.

சவாலான நடிப்பு

சவாலான நடிப்பு

அவர் மேலும் கூறும்போது, நான் நடிக்க வேண்டும் என்று நினைத்த நடிகர்களில் ரஜினியும் ஒருவர். அவருடன் நடிப்பது மிகுந்த பொறுப்பு கொண்டது. ஏனென்றால் அவரை நடிப்புக் கடவுள் என்கிறார்கள். நான் வில்லனாக நடித்தாலும் அவருடன் நடிப்பது சவாலானதுதான்.

கைதட்டிய ரஜினி

கைதட்டிய ரஜினி

படப்பிடிப்பில் உணவு, அரசியல், பிட்னஸ் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டோம். அவரிடம் பிடித்த விஷயம், உடன் நடிப்பவர்களை பாராட்டுவது. நான் ஒரு வசனத்தை சிறப்பாக பேசிய போது, எழுந்து நின்று கைதட்டினார். ஒரு சூப்பர் ஸ்டார் நடிகரிடம் இருந்து இதுபோன்ற அங்கீகாரம் வருவது பெரிய விஷயம்' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X