Bigg Boss 3: சாண்டிக்கும், ரித்விகாவுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை பார்த்தீங்களா?
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவராக வனிதா விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. முதல் நாள் நிகழ்ச்சியை பார்த்த இளம்பெண்கள் தர்ஷன், கவின், முகென் ஆகியோரை பார்த்து வாவ் என்றார்கள்.
பெண் கிடைக்காமல் அல்லாடும் 90ஸ் கிட்ஸுகளோ(இன்னுமாய்யா நீங்க கிட்ஸ்) சாக்ஷி, லாஸ்லியா, அபிராமியை பார்த்து ஃபீல் பண்ணினார்கள்.

வனிதா விஜயகுமார்
பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவராக வனிதா விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் சும்மா இருந்தாலும் பிக் பாஸ் சும்மா இருக்க விட மாட்டார் போன்று. அவரை சண்டை போடுவதற்காக மட்டுமே தேர்வு செய்திருக்கிறார் பிக் பாஸ். அதனால் சாதாரண விஷயத்தில் கூட வனிதாவின் முகத்தை பயங்கரமாக காட்டி மிரட்ட முயற்சி செய்கிறார்கள்.

ஜனனி
இந்த சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டிலை வெல்ல மாட்டார். காரணம் கடந்த சீசனின் முதல் தலைவராக ஜனனி தேர்வு செய்யப்பட்டார். கடைசி வரை தாக்குப்பிடித்த ஜனனியால் டைட்டிலை வெல்ல முடியவில்லை. கடந்த சீசனை போன்றே இந்த சீசனிலும் டைட்டிலை வெல்பவரை நெட்டிசன்கள் தான் தீர்மானிப்பார்கள் போன்று.

சாண்டி
கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் ரித்விகா பச்சை குத்திக் கொண்டார். அது ஆயுளுக்கும் இருக்கும் என்று தெரிந்தும் செய்தார். இந்நிலையில் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததற்கு அடையாளமாக சாண்டி மாஸ்டரின் நாடியில் தையல் தழும்பு இருக்கும். வழுக்கி விழுந்து காயம் அடைந்த சாண்டிக்கு 4 தையல் போடப்பட்டுள்ளது.

தர்ஷன்
சாக்ஷியை பாத்ரூம் கழுவ விட்டதை பார்த்து வாலிபர்களும், தர்ஷனை கக்கூஸ் கழுவ விட்டுவிட்டாரே இந்த பிக் பாஸ் என்று பெண்களும் குமுறியுள்ளனர். ஸ்க்ரிப்ட் நன்றாக இருந்தாலும் பார்க்க மொக்கையாக இருக்கிறது பிக் பாஸ். கொஞ்சம் மசாலா சேர்த்தால் பார்க்கலாம் என்று முதல் நாளே விமர்சனம் எழுந்துள்ளது. பிக் பாஸ் வீட்டிற்கு பாத்திமா பாபுவை அழைத்து வந்ததற்கு போட்டியாளர்களுக்கு நல்ல சோறு கிடைத்துள்ளது. அவரின் சமையல் கலையை பார்க்கும்போது ரசிகர்களுக்கு மும்தாஜின் நினைவு வருகிறது.


Click it and Unblock the Notifications











