Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னாது, பும்ராவுக்கும்-தனுஷ் ஹீரோயினுக்கும் இடையே 'ல்தகா சைஆ'வா?
சென்னை: ட்விட்டரால் நடிகை அனுபமா பரமேஸ்வரனும், கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா பற்றி தான் ட்விட்ரில் நெட்டிசன்கள் தீவிரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவரின் பந்து வீச்சை பற்றி அல்ல மாறாக காதல் பற்றி பேசுகிறார்கள்.
பும்ரா காதலிக்கிறாரா, யாரை, சொல்லவே இல்லை என்று நினைப்பவர்கள் அவசரப்படாமல் முழுமையாக இதை படிக்கவும்.
அனுபமா பரமேஸ்வரன்
ஜஸ்ப்ரீத் பும்ரா ட்விட்டரில் மொத்தம் 25 பேரை தான் பின்தொடர்கிறார். அவர் பின்தொடர்பவர்களில் ஒரேயொரு நடிகை உள்ளார். அந்த நடிகை தான் நம்ம அனுபமா பரமேஸ்வரன். ஆமாம், தனுஷின் கொடி படத்தில் நடித்த அதே அனுபமா தான். அதே போன்று அனுபமாவும் பும்ராவை ட்விட்டரில் பின்தொடர்கிறார்.
காதல்
பும்ரா ஏன் தனக்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாத அனுபமா பரமேஸ்வரனை ட்விட்டரில் பின் தொடர வேண்டும். அனுபமாவுக்கு பும்ராவை எப்படித் தெரியும். இருவரும் காதலிக்கிறார்களோ, அதனால் தான் ட்விட்டரில் ஒருவரையொருவர் பின் தொடர்கிறார்கள் என்று நெட்டிசன்கள் அவர்களாவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்.
ரீட்வீட்
பும்ரா அனுபமா போடும் ட்வீட்டுகளை லைக் செய்கிறார். பதிலுக்கு அனுபமா பும்ராவின் ட்வீட்டுகளை ரீட்வீட் செய்கிறார். இதை பார்த்து தான் நெட்டிசன்கள் அவர்களுக்கு இடையே காதல் என்று பேசத் துவங்கிவிட்டனர். ஏம்பா, ட்விட்டரில் ஒருவரையொருவர் பின்தொடர்வதும், ட்வீட்டுகளை லைக் செய்வதும் ஒரு குத்தமா, உடனே காதல் என்று பேசலாமா என்று கேட்டால் எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாத அவர்கள் அப்படி செய்வதால் தான் சந்தேகமே வருகிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.
படங்கள்
பும்ரா தற்போது ரொம்பவே பிசியாக உள்ளார். ஆனால் அனுபமா ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார். நெட்டிசன்கள் தன்னை பற்றி பேசி ட்வீட் செய்வது இன்னும் அவர் கண்ணில் படவில்லை போன்று. அவர் அந்த ட்வீட்டுகளை பார்த்திருந்தால் நிச்சயம் விளக்கம் அளித்திருப்பார். அனுபமா தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை மீண்டும் தமிழ் படத்தில் நடிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மீண்டும் கோலிவுட் பக்கம் வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?