GBU: எந்தளவுக்கு குட்.. எதெல்லாம் பேட்.. தேவையில்லாத அக்லி என்ன? குட் பேட் அக்லி ஒரு டீப் அலசல்!

சென்னை: குட் பேட் அக்லி என டைட்டிலுக்கு தகுந்தவாறே ஒரு படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டு எடுத்துள்ளாரா? என்கிற கேள்வி தான் படம் பார்க்கும் போது எழுகிறது. அஜித் ரசிகர்கள் தொண்டைக் கிழிய தியேட்டரில் கத்திக் கொண்டாடணும் என படம் எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் பக்கத்துல அமர்ந்திருக்கும் ஃபேமிலி ஆடியன்ஸ் நிலைமையை நினைத்துப் பார்த்தாரா என்பது தான் பெரிய கேள்விக் குறி.

மார்வெல் படங்களில் பெரிதாக கதை இல்லாமல் இருந்தாலும் ரசிகர்களுக்கான கூஸ்பம்ப்ஸ் ட்ரீட்டை கொடுத்து பல கோடி பாக்ஸ் ஆபீஸ்களை கல்லா கட்டியது போன்ற ரூட்டை ஆதிக் ரவிச்சந்திரன் பல வருடங்கள் கழித்து அஜித் குமாருக்காக பிடித்துக் கொடுத்திருக்கிறார்.

What is Good Which is Bad and Why this much Ugly in Ajith Kumar s Good Bad Ugly A deep analysis

நல்ல கருத்துள்ள படங்களை எல்லாம் அஜித் குமார் கொடுத்தால், அதையெல்லாம் ரசிகர்கள் போர் என தூக்கிப் போட்ட நிலையில், இவர்களுக்கு இது போதும் என செதுக்கப்பட்ட எம் குமரன் சிலையாகவே குட் பேட் அக்லி படம் உள்ளது.இந்த படத்தில் எதெல்லாம் குட் எதெல்லாம் பேட் மற்றும் எது தேவையற்ற அக்லி என்பது குறித்து விரிவாக ஒரு விரிவான அலசலாக இங்கே பார்க்கலாம் வாங்க..

What is Good Which is Bad and Why this much Ugly in Ajith Kumar s Good Bad Ugly A deep analysis

குட்: அஜித் குமாரை தியேட்டரில் எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டார்களோ அந்தளவுக்கு இளமையாகவும், ஸ்டைலாகவும், வித்தியாசமான தோற்றங்களில் ரெட் டிராகனாகவும் காட்டிய விதத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் 'குட்' வாங்குகிறார். அஜித்தை இப்படி காட்டினாலே கல்லா கட்டி விடலாம் என மற்ற இயக்குநர்களுக்கும் அவர் பாடம் எடுத்துள்ள விதம் பக்கா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் எங்கேயும் சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை கொடுக்காமல் பிரம்மாண்டமான குவாலிட்டியுடன் படத்தை கொடுத்திருப்பது ரொம்பவே குட். இளமை இதோ இதோ, ஒத்த ரூபா, சுல்தானா உள்ளிட்ட ரெட்ரோ பாடல்களின் பிளேஸ்மெண்ட், அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர், சிம்ரன் வரும் போர்ஷன் எல்லாமே வேறலெவலில் கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும் 'குட்' காட்சிகள்.

What is Good Which is Bad and Why this much Ugly in Ajith Kumar s Good Bad Ugly A deep analysis

பேட்: விஷுவல்ஸை இந்தளவுக்கு தாறுமாறாக கொடுக்கத் தெரிந்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அதை எந்த கதைக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாமல் போனது ரொம்பவே 'பேட்'. த்ரிஷா போர்ஷன், மகன் கார்த்திகேயா தேவ் போர்ஷன் எல்லாமே 'பேட்' ஆகத்தான் எழுதப்பட்டுள்ளது. பிரசன்னா, சுனில், பிரபு, யோகி பாபுவின் காமெடி, டினு ஆனந்த் என ஒவ்வொருவரும் தரும் பில்டப் எல்லாமே படத்திற்கு பலமாக மாறாமல் பலவீனமாக மாறியிருக்கிறது.

அக்லி: ஜாக்கி ஷெராஃப் போர்ஷன் ரொம்பவே அக்லியாக திரைக்கதையில் மாறியிருக்கிறது. அதற்கு பதிலாக அர்ஜுன் தாஸை விட பெரிய வில்லன் ஒருவர் இருக்கிறார் என்கிற பில்டப் மற்றும் அடுத்த பாகத்துக்கான லீடாக கூட கொண்டு போயிருக்கலாம். அஜித் பட ரெஃபரன்ஸ்கள் ஓவர்டோஸ் ஆக மாறியிருப்பது படத்தை பல இடங்களில் கண்டபடி கெடுத்து விட்டன. ஏகன் படத்தில் எப்படி அஜித் குமார் வில்லனை பார்த்ததும் காலி செய்துவிடுவாரோ அதே போலத்தான் இந்த படத்திலும் அவருக்கான பில்டப் ஹெவியாக உள்ளது. தனது மகனையும் மனைவியையும் அவர் எப்படி காப்பாற்றப் போகிறார் என்கிற ட்விஸ்ட் வைத்த இடத்தில் கூட கூலாக சிம்ரனை கொண்டு வந்து கெடுத்துவிட்டார். காரில் அர்ஜுன் தாஸ் அஜித் மகனை கொல்ல துரத்தும் போது உள்ளுக்குள் புலி பாடலை பாடிக் கொண்டு டார்க்கி எந்தவொரு ஷேக்கும் இல்லாமல் ஸ்டெப்ஸ் போட்டு ஆடுவதும் சவுண்டை அதிகம் ஏற்றி காதுகளில் ரத்தம் வர வைக்கும் அளவுக்கு செய்தது எல்லாம் தேவையில்லாத 'அக்லி' (ஆணி). சில பல குறைகள் இருந்தாலும் குட் பேட் அக்லி ஓஜி சம்பவம் செய்துள்ளதால் அஜித் ரசிகர்கள் மற்றும் என்டர்டெயின் விரும்பிகள் தாராளமாக தியேட்டருக்குச் சென்று படத்தை கொண்டாடலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X