Hombale ஃபிலிம்ஸ் – சுதா கொங்கரா படத்தின் ஹீரோ சூர்யாவா...செம உருட்டா இருக்கே?

சென்னை : உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த கேஜிஎஃப் இரண்டு பாகங்களையும் தயாரித்த Hombale ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக சோஷியல் மீடியாவில் மிக வேகமாக தகவல் ஒன்று பரவி வருகிறது.

கன்னடத்தில் புனித் ராஜ்குமார், யாஷ் நடித்த சில படங்களை Hombale ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் இதுவரை தயாரித்த 6 படங்களும் செம ஹிட். கன்னட படங்களை மட்டுமே தயாரித்து வந்த இந்நிறுவனம் கேஜிஎஃப் சாப்டர் 1 மற்றும் கேஜிஎஃப் 2 பாகங்களை பான் இந்தியா படமாக பல மொழிகளிலும் தயாரித்து வெளியிட்டது.

Hombale ஃபிலிம்ஸ் அடுத்த படம்

Hombale ஃபிலிம்ஸ் அடுத்த படம்

கேஜிஎஃப் 2 படம் ரிலீசான 7 நாட்களில் 715 கோடிகளை வசூல் செய்துள்ளது. கேஜிஎஃப் 2 கொடுத்த பிரம்மாண்ட வெற்றியால் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டது Hombale ஃபிலிம்ஸ். தங்கள் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாகவும், இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னது ஹீரோ சூர்யாவா

என்னது ஹீரோ சூர்யாவா

ஏற்கனவே சுதா கொங்கரா, அடுத்ததாக சூர்யாவை மீண்டும் இயக்க போகிறார், அடுத்த படத்தில் அஜித்தை இயக்க போகிறார் என பல தகவல்கள் பரவி வந்தன. தற்போது ஹீரோ யார், எந்த மொழி படம் என தெரிவிக்காமல் Hombale ஃபிலிம்ஸ், சுதா கொங்கராவை டைரக்டராக அறிவித்ததால், Hombale ஃபிலிம்ஸ் - சுதா கொங்கரா இணையும் புதிய படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக சோஷியல் மீடியாவில் வேகமாக தகவல் பரவ துவங்கியது.

இப்படி ஒரு விஷயம் இருக்கா

இப்படி ஒரு விஷயம் இருக்கா

சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கி சர்வதேச அளவில் விருதுகளை அள்ளிய சுதா கொங்கரா, சூர்யாவை வைத்து மற்றொரு படத்தை இயக்க போவது உண்மை தானாம். ஆனால் அது Hombale ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படம் இல்லையாம். தற்போது சூர்யா, பாலா இயக்கும் சூர்யா 41, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கும் படம் என பிஸியாக இருப்பதால் இந்த படங்களை முடித்த பிறகே சுதா கொங்கரா - சூர்யா இணையும் படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளதாம்.

யாருப்பா அந்த ஹீரோ

யாருப்பா அந்த ஹீரோ

Hombale ஃபிலிம்ஸ் - சுதா கொங்கரா படத்தில் பெரிய ஹீரோ ஒருவர் லீட் ரோலில் நடிக்க போகிறாராம். இதனால் சுதா இயக்க போகும் புதிய படத்தின் ஹீரோ யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அது யாஷா இருக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 3 எடுக்க போவதாக அறிவித்துள்ளதால், சுதா கொங்கரா படத்தில் யாஷ் கமிட் ஆவாரா என தெரியவில்லை. அதோடு கேஜிஎஃப் 3 படத்தை அறிவித்து விட்டார்கள். அந்த படத்தை Hombale ஃபிலிம்ஸ் தயாரிக்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X